பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

bill

18

board



முதிர்ச்சி அடையும் பொழுது, பெறப்பட வேண்டியவை

bills receivable book — வரவு உண்டியல் சீட்டு ஏடு. இச்சீட்டு நாம் பிறர் மீது வரையினும் அல்லது பிறர் நமக்கு மேலொப்பம் செய்து தந்தாலும் அவை இதில் பதியப்படும். கடன் உறுதிச்சீட்டு, உண்டியல் ஆகியவையும் இதில் பதியப்பெறும்.

black economy – கறுப்புப் பொருளாதாரம்: கள்ளப் பொருளியல். மறைவாக நடைபெறும் பொருளாதாரச் செயல்

blackmarket – கறுப்புச்சந்தை: கள்ளச்சந்தை. ஒரு பொருள் அல்லது பணிக்காக நடைபெறும் சட்டமுரண்சந்தை. குறிப்பிட்ட வாணிபத்திற்குச் சட்டதிட்டங்கள் வரும் பொழுது நடப்பது

black money – கறுப்புப் பணம்: கள்ளப் பணம். கணக்கில் வராத பணம். பண வீக்கத்திற்கு இதுவே காரணம்

blank bill - வெறும் உண்டியல்: பெறுபவரின் பெயர் குறிப்பிடப்படாத மாற்றுச்சீட்டு

b. cheque - வெறுங்காசோலை: பெயர் குறிப்பிடப்படாத காசோலை

b. endorsement – வெறும் மேலொப்பம்: வெற்றுப்புறக் குறிப்பு அல்லது மேலெழுத்து

b.transfer - வெறும் மாற்றுதல்: பங்குத்தொகை மாற்றுகைப் படிவத்தில் மாற்றும் நாள். மாற்றப்படுபவர் பெயர் ஆகியவை குறிக்கப்படாமல் இருக்கும்

block capital – நிலைமுதல்:அசையா முதல்

blocked account - முடக்கக் கணக்கு: 1) திவால், நிறுமக் கலைப்பு முதலியவை காரணமாகப் பணம் எடுக்கப்பட முடியாத கணக்கு

2)அந்நியச் செலாவணி காரணமாக ஏற்றுமதியாளர் தம் பணத்தை இறக்குமதியாளரிடமிருந்து பெறமுடியாத நிலையுள்ள கணக்கு

blocked currency — முடக்கச்செலாவணி: மாற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல இயலாத தாள் பணம்.

blue chip - நீலப்பங்கு: உயர் பங்கு. நற்பெயரும் நல்ல வளர்ச்சியும் நிறைந்த இருப்புகள் கொண்டது

board of customs and excise— சுங்கத் தீர்வை வாரியம்: சுங்க வரிகளையும் தீர்வை வரிகளையும் வசூல் செய்யும் அரசுத்துறை

board of directors – இயக்குநர் அவை: ஒரு நிறுமத்தின் ஆட்சிக்குரிய குழு