பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

com

30

com


commerce - வணிகவியல்: தனியார் அல்லது நாடுகளுக்கிடையே வாணிபம் பற்றி ஆராயுந்துறை.

commercial - விளம்பரம் தொலைக்காட்சி அல்லது வானொலி வழி நடைபெறுவது.

commerical course - வணிகப் படிப்பு: மேல் நிலைப்பள்ளியிலும் - கல்லூரிகளிலும் அளிக்கப்படுவது.

commerclal crops - வணிகப் பயிர்கள்: பொருளாதாரச் சிறப்புடைய பயிர்கள் எ-டு. காப்பி, தேயிலை.

commercial geography - வணிகப் புவி இயல்: காப்பி, தேயிலை முதலிய வணிகப் பயிர்கள் பற்றி ஆராயும் பொருளாதாரச் சிறப்புள்ள துறை.

commercial Involce - வணிக இடாப்பு: வணிகப் பட்டியல், வணிகச் சரக்குளை விளக்கும் பட்டியல்.

commission - கழிவு: விற்பனையில் முகவர், விற்பனையாளர், தரகர் முதலிய இடைப் பட்டவருக்கிடையே அளிக்கப்படும் குறிப்பிட்ட தொகை. 2)

commission - ஆணையம்: ஆணைக்குழு, பா. discount.

commission agent - கழிவு முகவர்: சரக்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் தேர்ச்சியுள்ளவர். இது ஒரு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அமைவது.

commodity - பண்டம்: கச்சாப் பொருள். தானியம், காப்பி, தேயிலை. மென் பண்டங்கள் என்றும் பெயர்.

commodity - பண்டச் சந்தை : பண்ட அங்காடி.

common market - பொதுச்சந்தை .

communicatlon - செய்தித் தொடர்பு: தொலைபேசி, தொலையச்சு, உருநகலி முதலியவை.

company - நிறுமம் : கூட்டமைப்பு. சட்டவரம்பு பெற்று ஒரே தொகுதியாக இயங்குவது. இது பல வகை.

company, Incorporated - ஒருங்கிணை நிறுமம்: இது தன் சொந்த உரிமையில் ஒரு சட்ட ஆளாக உள்ளது. சொத்தை உரிமை கொள்வது. வழக்கு தொடுப்பது, தொடுக்கப் படுவது.

company joint stock - கூட்டுப் பங்கு நிறுமம்: இதில் இதன் உறுப்பினர்கள் தங்கள் இருப்பைத் தாங்களே தேடுவர். அவர்கள் இருப்பு அடிப்படையில் வாணிபம் நடைபெறும்.

company law - நிறுமச்சட்டம்: நிறுமக்கட்டுப்பாடு, நடப்பு.