பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

con

33

con


ஆவணம். ஒருவழி உண்டியல் இது.

consignment, outward -வெளி அனுப்பீடு.

consignor - அனுப்புநர்: சரக்குகளை அனுப்புபவர்.

consolidated accounts - தொகுப்புக் கணக்குகள்: நிறுமத்தொகுதிகளின் சேர்ந்த கணக்குகள்.

consolidated annultles - தொகுப்பு ஆண்டுத் தொகைகள்.

consols - கடன் பத்திரங்கள்: அரசு ஈடுகள், வட்டியளிப்பவை.

consortlum - இணையம்:, தற்காலிகமாக இரண்டிற்கு மேற்பட்ட பெரிய நிறுமங்கள் சேர்ந்து, ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கல். ஒரு புதிய மின் நிலையம் அல்லது அணைக் கட்டிற்காக இது இருக்கலாம்.

consular Invoice - பேராள் இடாப்பு: ஏற்றுமதிப் பட்டியல், ஏற்றுமதி செய்யப்படும் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் நாட்டின் பேராளினால் சான்றிடப்படல்.

consumer cooperatlon - நுகர்வோர் கூட்டுறவு.

consumer cooperative stores - நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள்.

consumer credit - நுகர்வோர் கடன்: சரக்குகள் வாங்கப் பொது மக்களுக்கு அளிக்கும் குறுகிய காலக் கடன்கள்.

consumer goods - நுகர்வோர் சரக்குகள் பொது மக்கள் வாங்கும் பொருள்கள்

consumer market - நுகர்வோர் அங்காடி: நுகர்வோர் சரக்குகளுக்குரிய சந்தை. தொழில் சந்தையிலிருந்து இது வேறுபட்டது.

consumption - நுகர்வு: பயன்பாடு. தனியாட்கள், நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் தற்காலிகத் தேவைகளை நிறைவு செய்ய, நுகர்பொருள்களையும் பணிகளையும் பயன் படுத்துதல். 2) நுகர்வோர் சரக்குகளிலும் பணிகளிலும் முழுப் பொருளாதாரத்தின் பணம் செலவழிக்கப்படுதல், இது நுகர்வோர் செலவு எனப்படும்.

container account - கொள்கலன் கணக்கு சரக்குகள் அனுப்பப்படும் கொள்கலன் பற்றிய விவரம்.

contingentannulty- எதிர்பாரா ஆண்டுத்தொகை: நிகழும் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டுமே கொடுக்கப்படும் ஆண்டுத் தொகை. கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவர் இறந்த பின் தொடங்கும் செலுத்த