பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

con

34

con


லைக் கொண்ட ஆண்டுத் தொகை. பின்வரு ஆண்டுத் தொகை.

contingent assets - எதிர்பாராச் சொத்துகள் நிகழ்வுறாச் சொத்துகள், காப்பில் அடங்குபவை.

contingent expenses - எதிர்பாராச் செலவுகள்.

contingent liabllitles - எதிர்பாராப் பொறுப்புகள்: குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழும் என்று ஐந்தொகையில் எதிர்பார்ப்பதனால் உண்டாகும் பொறுப்பு, எ-டு. ஒரு நிறுமத்துக்கு எதிராக நீதிமன்றத்திலுள்ள வழக்கு. அதன் முடிவை அறுயிட்டுச் சொல்ல இயலாது.

contra account - எதிர்க் கணக்கு.

contra entrles - எதிர்ப் பதிவுகள்: கணக்கு வைப்புப் பதிவுகள், முன் பதிவை நீக்கக் கணக்கு எதிர் பக்கத்தில் செய்யப்படுவை பா. percontra.

contraband goods - கள்ளச்சரக்குகள்: கடத்தல் சரக்குகள்.

contract - ஒப்பந்தம்: விலைக் குறிப்பீடு, ஏற்பு ஆகிய இரண் டின் விளைவால் ஏற்படும் சட்டப்படியான உடன்பாடு. பல தேவைகளையும் அது நிறைவு செய்வதாய் இருக்க வேண்டும்.

contract note - ஒப்பந்தக் குறிப்பு: பங்குத்தரகர் அல்லது பண்டத்தரகர் தம் வாடிக்கை யாளருக்குச் சான்றாக அனுப்பும் ஆவணம், தம் வாடிக்கையாளர் அறிவுறுத்தல்களின்படி ஈடுகளை வாங்கியதற்கும் விற்றதற்கும் இது சான்று.

contribution: - அளிப்பு: 1) குறிப்பிட்ட அளவு வாணிபப் பொருள் விற்கும் விலை. இதில் மாறும் உற்பத்தி ஆக்கச் செலவுகள் நீக்கப்படும் 2) உரிமை கோரும் செலுத்தல்களை இரு காப்புறுதியாளர்கள் பகிர்ந்து கொள்ளுதல்.

contributory - வழங்குநர்: ஒரு நிறுமம் நொடிக்கும் பொழுது அதன் இருப்புகளுக்குப் பணம் அளிப்பவர்.

control accounts - கட்டுப்பாட்டுக் கணக்குகள்: வேறு பெயர் மொத்தக்கடனாளிக் கணக்கு. இதில் எல்லாத் தனியாள் கடன் கணக்குகளின் தொகுப்புக்குச் சமமாக, இருப்பு இருக்கும்.

control of cost - ஆக்கச் செலவுக்கட்டுப்பாடு: ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்குரிய செலவு.

controllable cost - கட்டுப்படுத்தக் கூடிய ஆக்கச் செலவு: ஆதாயங்காணக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும் செலவு.

conversion - மாற்றம்.

conversion cost - மாற்றும் ஆக்கக் செலவு.