பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

cost

36

cost


cost account - ஆக்கச் செலவுக் கணக்கு: ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஆகும் செலவு.

cost accountant - ஆக்கச் செலவுக் கணக்கர்: ஒரு நிறுவனக் கணக்கர், தொழிற் சாலை முறைகளின் திறன், அடக்கம் ஆகியவற்றிற்குரிய தகவல்களைத் திரட்டிக் கையாள்வதே இவர் முதன்மையான பணி. இதன் அடிப்படையில் தொழில்களின் இலாபத்தைப் பற்றி மேலாண்மைக்கு அறிவுரை கூறுவார். ஒரு நிறு வனத்தின் பல துறைகளின் வரவு செலவுக் கட்டுப்பாடு, மதிப்பீடுகள், அலகு அடக்கங்கள் ஆகியவற்றை இயக்குபவர், இவரே ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதற்குரிய தகவல்களை அளிப்பவர். ஆக்குநர் எனலாம்.

cost accounting - ஆக்கச் செலவு கணக்கிடுதல்: உற்பத்தி செலவு பார்த்தல்.

costallocation - ஆக்கச் செலவு ஒதுக்கீடு.

cost apportionment - ஆக்கச் செலவுப் பங்கீடு: உற்பத்திச் செலவு பகிர்வு செய்தல்.

cost ascertainment - ஆக்கச் செலவு அறுதியிடல்: அடக்கத்தை உறுதி செய்தல்.

cost audit - ஆக்கச் செலவுத் தணிக்கை: அடக்கத் தணிக்கை.

cost benefit analysis - ஆக்கச் செலவு நன்மைப் பகுப்பு; தொடர்பான பொருளாதரச் செலவுகள், அடிப்படை நன்மைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு திட்டத்தைச் செயற்படுத்த முடிவு செய்ய உதவும் பகுப்பு.

cost classification - ஆக்கச் செலவு வகைப்பாடு: உற்பத்திச் செலவுப் பாகுபாடு.

cost control department - ஆக்கச் செலவுக் கட்டுப்பாட்டுத் துறை: உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதி.

cost effectiveness - ஆக்கச் செலவு விளைவு: 1. குறைந்த செலவைக் கொண்டு இலக்கை அடைதல் 2. ஓர் இலக்கை அடைய உதவும் செலவு, வாணிப வெற்றியாக அமைதல்.

cost elements - ஆக்கச் செலவு மூலங்கள்: அடக்கச் செலவுக் கூறுகள்,

cost estimate - ஆக்கச் செலவு மதிப்பீடு: அடக்க மதிப்பீடு.

cost, fixed - ஒரே ஆக்கச் செலவு. மாறா அடக்கச் செலவு.

cost function - ஆக்கச் செலவுச்சார் பலன்: உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆகும் வேறுபட்ட செலவுகளை வரையறை செய்யும் சார்பலன். உற் பத்திக் கொள்கையில் சில