பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


“இன்னும் எவ்வாறு நான் சான்று காட்டுவேன்?” என்று சிதை முறையிடுகையில் பூமி பிளக்கிறது. உள்ளிருந்து ஒரு நேர்த்தியான ஆசனம் வந்து அவளை ஏந்திக் கொள்ள, பூமிக் கடியில் அவள் செல்கிறாள். பூமிப் பிளவு மூடிக் கொள்கிறது என்று நாடகப் பாணியில் சீதையின் முடிவு விவரிக்கப்படுகிறது.

பின்னர் இராமர் அந்த இரு மைந்தர்களையும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு நாடு திரும்புவதாக இராமாயண வரலாறு இயம்புகிறது.

அரக்கன் மாளிகையில் பத்து மாதங்கள் இருந்த காரணத்தால் அவள் மாசுபடிந்தவளானாள். எந்த அக்கினியாலும் அவள் மாசை அழிக்க முடியவில்லை. ஆனால் அவள் பெற்ற குழந்தைகள், ஆண்மக்கள் அரசுக்கு உரிய சந்ததியினராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.

பவபூதி - எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி நாடகாசிரியர். வால்மீகியின் முடிவை இவர் ஏற்றிருக்கவில்லை. ‘உத்தர ராம சரிதம்’ என்ற நாடகத்தின் வாயிலாக, அந்த முடிவை மாற்றியமைத்தது மட்டுமின்றி, தம்மை உறுத்தும் வேறு சில செய்திகளையும் வெளியிட்டிருக்கிறார். சம்பூகனைக் கொலை செய்யுமுன் இராமர், “வலதுகரமே, நீவேதியன் மகனை வாழ்விக்க, சூத்திர முனிவர் மீது உடைவாளை வீசுவாய்? நிறை சூலி சீதையை வனமனுப்பியவன் அங்கமல்லவா? உனக்குக் கருணை ஏது?” என்று நெஞ்சோடு கடிந்து கொண்டதாக எழுதியுள்ளார். அது மட்டுமன்று வால்மீகி ஆசிரமத்துச் சீடர்கள் நகைச்சுவை மேலிட ருஷி - தாடிகள் வரும்போது, பசுங்கன்றுகள் விழுங்கப்படுகின்றன என்று பேசிக் கொள்வதாகச் சித்திரிகிக்கிறார்.

அவருடைய நாடகத்தில் அந்தண முனி ஆதிக்கங்களுக்கு எதிரான குரல் இழையோடுகிறது.

இவருடைய நாடக முடிவில் சீதையைப் பூமி விழுங்க வில்லை. மன்னருடன் தாயும் மைந்தர்களும் சேர்ந்து விடுகின்றனர். சீதை உயிர்க்குலத்தை வாழ வைக்கும் செல்வி அஹிம்சை வடிவானவள். இராமன் வனமேகும்போது வில்லும் அம்பும்