பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

35


“தேவி, என்ன இது? .. மன்னர் வருவார்.” ஆதரவாக அவள் பூம்பட்டாடை நுனி கொண்டே கண்ணிதழ்களை ஒத்தி எடுக்கிறாள்.

“அவந்திகா, அந்த ஜலஜை, யவன மகளோ?”

“எந்த அடிமை மகளோ? சிறுக்கி. பூனைக் கண்காரிகளே கபடர்கள். மனசுக்குள் பெரிய அழகி என்ற கர்வம், மூத்த மகாராணிக்கும் சிறிதும் இங்கிதம் தெரியவில்லை. இவளைத் துணி வெளுக்க, பாண்டம் சுத்தம் செய்ய அனுப்ப வேண்டியதுதானே? இல்லையேல் சமையற்கட்டில் அறுக்கவோ, தேய்க்கவோ, இடிக்கவோ, புடைக்கவோ வைத்துக் கொள்ளட்டும். இளைய மகாராணிக்கு அவளைக் கட்டோடு பிடிக்காது. மன்னருக்கும் அமைச்சருக்கும் இவளிடம் உணவு கொடுத்து அனுப்புகிறார். அத்துடனா? எச்சிற்கலம், தாம்பூலத்தட்டு எல்லாம் இவள் கொண்டு போகிறாள். கவரி வீசவும், எச்சிற்கலம் ஏந்தவும் இவள் அருகில் நிற்க வேண்டுமா? மன்னரைப் பார்த்தால் ஒரு சிரிப்பு; நெளிப்பு; ஒய்யாரம். படியேறி வருகையில் இவள் பாதம் கழுவ முன்வருவது சரியாகவா இருக்கிறது. இந்த மன்னர் சத்திய வாக்கைக் கடைப்பிடிப்பவரல்லவா? அவரிடம் சென்று சீண்டினால், அவளல்லவோ துரும்பாகப் பற்றி எரிவாள்? இவரென்ன அந்தப்புரத்தில் சிறைக்கூடம் கட்டிப் பட்சிகளை சிறகொடித்து அடைத்திருக்கிறாரா?.. சக்கரவர்த்தி மகாராஜாவின் சிறைக்கூடத்தையே இளைய மகாராணி திறந்து, அந்தச் சுவர்களை இடித்து, விடுதலை செய்து விட்டாரே? இந்த ஜலஜைக்கு முதலில் ஒரு சம்பந்தக்காரன் குதிரைக்காரன் வந்தான். அவன் குதிரை தள்ளியதில் இடுப்பொடிந்து மாண்டான். இப்போது இவளுக்கு ஒரு வயகக்குழந்தை இருக்கிறது. சலவைக்கார சந்திரிதான் புருசன். இவள் அவனோடு துறைக்குப் போக வேண்டியவள்தானே? தாய்வீட்டில் என்ன வேலை?. மகாராணி இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?..”

அவந்திகா பேசிக் கொண்டே போகிறாள். அந்த வார்த்தைகளுள் பொதிந்த காரம் நெருப்புப் பொறிகள் போல்