பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வருங்கால மானிட சமுதாயம்


முடியாது போன அதன் வெற்றியை, கடந்த 110 ஆண்டுக்காலச் சமுதாய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை ஆராய வேண்டும்; உண்மை நோக்கில் எடை போட வேண்டும்.

நமது காலம் சிக்கலும் முரண்பாடுகளும் மிக்க நிகழ்ச்சிப் போக்குகளின் காலமாகும்.

கொந்தளித்துப் பொங்கும் ஒர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி உருவாகி வருகிறது; அணு ஆற்றல் நிலையங்கள், முற்றிலும் தானியங்கியான ஆலைகள் தொழிற்சாலைகள், வேதியல் சேர்க்கைப் பொருள்கள், வண்ணத் தொலைக்காட்சி, மிகு விரைவு கொண்ட வானூர்திகள், மிகவும் பெரும்சிக்கலான கணிதப் புதிர்களைக் கூட வினாடியில் தீர்த்து விடை பகரக் கூடிய கணினி எந்திரங்கள் - ஆகிய இவையெல்லாம் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டன; இதனால் தொழில்நுட்ப அருஞ்செயல்களைக் கண்டு இப்போது மக்கள் வியப்பதே இல்லை. இன்றே இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒரு காணி நிலத்தில் எவ்வளவு விளைச்சல் கண்டதோ அதைக் - காட்டிலும் பத்து மடங்கு அதிகமான விளைச்சலை அதே நிலம் காண்கிறது. இக் காலத்துத் தானியங்கி எந்திரங்கள் நூற்றுக்கு மேற்பட்ட பேர்களின் வேலையைச் செய்ய முடியும்; அதன் மூலம் அவை உழைப்பைச் எளிதாக்கவும், அதனை மகிழ்ச்சியளிப்பதாக்கவும் முடியும் நிலவினை ஏற்கெனவே எட்டிப் பிடித்து விட்ட படவி வெளிச் செலவுகள் புதிய உலகங்களையும் அவற்றின் புதிர்களையும் கண்டறிவதில் மாந்தனுக்குள்ள திறமையைக் குறித்த ஐயப்பாடுகளை யெல்லாம் தூளாக்குகின்றன.

இத்தகைய முன்னேற்றம் இருக்கும்போதே உலகில் வறுமை நிலவுகிறது; நடைப்பிணங்களாக அந்தோ