பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வருங்கால மானிட சமுதாயம்


சமன்மையத்தின் வலிமையும் செல்வாக்கும் நாம் வாழ்ந்து வரும் காலத்தின் மிகவும் அரும்பெரும் கூறாகும்.

எதிர்காலம் நமக்கு என்ன வழங்க இருக்கின்றது? அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்து துன்ப துயரங்களையும் போக்கப் போகின்றதா? அல்லது மாபெரும் அழிவுக்குரிய ஆற்றல் உலகின் அனைத்து உயிர் வாழ்க்கையையும் தூர்த்துத் துடைக்கப் போகின்றனவா? தேயங்கள் தமது உரிமையைப் பெற்று அவற்றைப் பாதுகாத்து வரமுடியுமா? அல்லது சமன்மை இன்மையும் ஒடுக்கு முறையும்தாம் அவற்றை எதிர் நோக்கி நிற்கின்றனவா? எதிர்காலம் யாருக்கு உரிமை? பொதுவுடைமைக்கா, இல்லை முதலாளியத்துக்கா?

எது புதியதோ, எது முன்னேற்றத்தைத் தன்னுட் கொண்டுள்ளதோ, அதற்குத்தான் எதிர்காலம் எப்போதும் உரியதாகும் என்றே வரலாறு காட்டுகின்றது. எனினும் பழமை முரட்டுத்தனமாக எதிர்ப்புக் காட்டுகின்றது. அது புதுமையைப் புண்படுத்த முடியும்; அதன் முன்னேற்றப் பாதையில் முட்டுக் கட்டைகள் போட முடியும். எனினும் இந்தப் புண்களெல்லாம் ஆறிவிடும்; முட்டுக் கட்டைகள் தகர்ந்து பொடியாகும்; ஏனெனில் புதுமையின் வெற்றி தவிர்க்க முடியாதது.

உரிமையும் பொதுவுடைமையும்தான் இன்று உலகில் புதுமையும் முற்போக்கானதும் ஆகும். உலகில் பல மக்கள் பொதுவுடைமை இயற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்; வெற்றிகளும் பெற்று வருகின்றனர். 1966 மார்ச்சு இறுதியிலும் ஏப்ரல் தொடக்கத்திலும் நடந்த சோவியத்து பொதுவுடைமைக் கட்சியின் 23-வது பேராயம் பொதுவுடைமை இயற்றுகையில் முதல் பயன்களைத் தொகுத்துக் கூறியது; பொதுவுடைமையை நோக்கி மேலும் முன்னேறுவதற்கான திட்டத்தையும் வகுத்துக் கூறியது. சமன்மை நாடுகளின் மக்களும் தமது வளர்ச்சியின் குறிக்கோள் பொதுவுடைமை என்று உறுதிவெளிப் படுத்தியுள்ளனர்.