பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

15



பொதுவுடைமையும் கட்டுக்கதைகளும்

மது மகிழ்ச்சிக்கு எவ்விதக் குந்தகமும் இல்லாது எல்லோரும் சமமாகவும் உரிமையாகவும் வாழக் கூடிய ஒரு சமுதாய அமைப்பை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் கற்பனை செய்ய முயன்று வந்துள்ளனர். தொடக்கத்தில் அத்தகைய கருத்துகள் முறையானவையாக இருந்தன.

கனவுகள்

மக்கள் தமது கனவுகளில் கடந்துபோன தொல்லைப் பழங்காலத்தை, சமுதாய சமுன்மை நிலவிய காலத்தை, சமுதாயச் சமன்மை நிலவிய காலத்தை, தனியார் உடைமையோ ஏழைகளைச் செல்வர் சுரண்டும் சுரண்டலோ இல்லாத காலத்தை நினைத்துப் பார்த்தனர். மாந்த வகுப்பின் வைகறைக் காலம் இருள் மண்டிக் கிடந்தது என்பதே உண்மையாயினும், பலர் அந்தத் தொல்லைப் பழங்காலத்தை ஒரு "பொற்காலம்" எனக் கருதினர். மேலும் பல்வேறு நாடுகளிலும் அந்தக் காலம் போற்றிப் புகழப்பட்டது.

"பொற்காலம்!" ......... பழம் பெரும் கிரேக்கப் பாவலரான இசியாது அக் காலத்தை, உலகம் தானாகவே செழிப்பான செல்வததை அள்ளித் தந்து வந்த காலமாக, உழைப்போ கவலையோ இன்றி மக்கள் வாழ்ந்து வந்த