பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வருங்கால மானிட சமுதாயம்


நாம் உட்டோப்போசு (Outopos - உட்டோப்பியா) என்ற கிரேக்கச் சொல்லின் பொருளைப் பார்ப்போம்; இச் சொல்லுக்கு "இடமற்றது", எங்கும் இல்லாதது என்பதே பொருள். அத்தகைய இடம் ஏதும் உண்மையில் இல்லை. மேலும், சான்றவர் உட்டோப்பசு என்ற ஒருவரிடமிருந்து அதனை எதிர்பார்த்தால், அப்படியொரு இடமே இருக்க முடியாது என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும் கனவகம் என்று ஒன்று இருப்பது இயலாது என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அவற்றை நாம் பின்னர் ஆய்வோம்.

உலகில் உட்டோப்பியா என்று எந்த நாடு இல்லை என்பதை மக்கள் விரைவிலே உணர்ந்தனர். ஆனால் அப் பெயர் மட்டும் மறக்கப்படவில்லை. அது அழகான எனினும் பலிக்காத பகற்கனவின் பொருளைப் பெற்றுவிட்டது. மூரின் கருத்தியல்நாட்டைத் தொடர்ந்து எண்ணற்ற பிற கனவுலக நாடுகளும் தோன்றின.

1602இல் சிறைக்குள்ளிருந்த இத்தாலிய மெய்யியல் வாணரான தொம்மாசோ காம்பனெல்லா தமது பொதுவுடைமை கனவுலகான சிவிட்டாசு சோலிஸ் (செங்கதிர் நகரம்) என்ற நூலை எழுதினார்; இந்நூல் 1623ல் வெளி வந்தது. அதிலும் கதை சொல்பவர் ஒரு தாளிகையாளர்தான். அந் நகரம் இந்துமாக் கடலில் தர்ப்ரோபானு என்ற கற்பனைத் தீவில் அமைந்திருந்தது.

அந்த செனோவா ஊர்சுற்றி கூறியதென்ன?

செங்கதிர் மரபினரின் (செங்கதிர் நகரின் குடிமக்கள்) சமுதாயத்தில் தனியார் உடைமை இல்லை. அங்கு மக்கள் பொருள்களுக்காகப் பணி புரியவில்லை; மாறாக மக்களுக்குப் பணி புரிவதற்குத்தான் பொருள்காள் படைக்கப்பட்டன. செங்கதிர் மரபினருக்குக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே உழைப்பை மதித்துப் போற்றக்