பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

23



கற்றுக் கொடுக்கப்படுகின்றது அது அவர்களுக்கு வெறும் கடமையாக இருக்கவில்லை; மாறாக, வாழ்க்கைக்கான தேவையாக இருந்தது அங்கு உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எந்த உழைப்பும் அங்கு ஒரு மதிப்புடையதாகும். எந்த அளவுக்கு உழைப்பு கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் மேன்மையும் அதிகம் அதே சமயத்தில் பல்வேறு தொழில் நுட்பக் கண்டு பிடிப்புக்களைப் பரவலான அளவில் பயன்படுத்துவதன் மூலம் அங்கு உழைப்பு எளிமையாக்கப்படுகிறது. (காம்பனெல்லா அங்கு பாய்மரத்தால் ஒடும் தானே இயங்கிச் செல்லும் ஊர்தி இருந்ததாகக் குறிப்பிடுகிறார் அங்குள்ள மக்களுக்குப் பறக்கவும் தெரிந்திருந்தது என்றும் கூறிகிறார்). அங்கு வேலை நாள் நேரம் நான்கு மணிநேரம்தான். பெண்கள் எளிமையான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்; அவர்கள் ஆண்களுக்குச் சமதை யானவர்களாகவும், பொதுவான மதிப்பைப் பெற்றவர்களாகவும் உள்ளனர் ஆக்கப் பொருள்களின் பெருவளம் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது தனித்ததொருசிறப்புக் கல்வி முறையும், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் முறையும் ஒரே சீராக வளர்ச்சி பெறும் மனிதனை உருவாக்கி வளர்ப்பதை உறுதி செய்கிறது நடைமுறை, அன்பு, நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே உறவுகள் அமைகின்றன. செங்கதிர் மரபினர் நேய தன்னார்வமும் வாய்மையும் மிக்கவர்கள்.

உண்மையில் அத்தகையதொரு நகரம் ஏதும் இருக்கவிலலை என்பதை காம்பனெல்லா ஒப்பு கொள்கிறார் ஆனால், மக்கள் தமக்குள் கூடிப் பழகும் வேட்கையை அடுத்தவர்களோடு ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று எல்லோரிடம் குடிகொண்டிருக்கும் உள்ளார்ந்த விருப்பத்தைப் பின்பற்றி நடந்தால், இறுதியில்