பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வருங்கால மானிட சமுதாயம்



செயின்ட் - சைமன் நெப்போலியன் மீது நம்பிக்கை வைத்திருந்ததுபோல், அல்லது விக்டோரியா பேரரசியிடத்திலும், உருஷ்ய நாட்டின் முதலாம் நிக்கொலாசு பேரரசரிடத்திலும் ஓவென் முறையிட்டுக் கொண்டிருந்ததைப்போல், முதலாளிய ஒப்புறவில் ஒருவர் நம்பிக்கை வைப்பாராயின், அவர் பெரிதும் சூதுவாது அறியாதவராகவே இருக்க வேண்டும். ஒவெனே ஒரு முதலாளிதான்்; அவர் ஈகம் செய்ய அணித்தாயிருந்தார்; உண்மையில் ஈகமும் செய்தார். முதலாளிகளும் மாந்தத் தன்மை கொண்டவர்கள் என்று அவா நம்பினார்; அதனால் மீண்டும் "மாந்த இயல்பே" ஒரு தன்மைான பங்கை வகிக்கப் போவதாக அவர் கருகினார். அதுதான் அவரது பொன்னான நம்பிக்கையாயிருந்தது.

செயின்ட் - சைமன் காலமானவுடனேயே அவரின் தொண்டர்கள் இறுதி மாற்றம் செய்வதற்கான தேவை வந்துவிட்டது என்று எழுதினார்; ஒழுக்கவாணர்களின் கடமை அடிப்படையை நிறுவுவதே பின்னர் அதனை ஆணையாக்குவது சட்ட அமைப்பாளரின் கடமையாகும் என்று எழுதினர்.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? சமன்மை கொள்கைகள் இன்னும் வாகைக்கோட்டைகளாகத்தான் இருந்து வந்தன; கனவுலகநாடு எல்லாம் வியப்புக்குரியதாயின எனினும் அடையமுடியாத குறிக்கோளாகவே இருந்தன. அவை உண்மையில் அரிய உயரிய கொள்கைகள்தாம்; பிற்காலத்தில் வேறுபட்ட சூழ்நிலையிலும், வேறுபட்ட வழிகளிலும் நடைமுறை வாழ்வில் எய்தப்பெற்ற பல கருத்துகள் அவற்றில் இருக்கத் தான் செய்தன.

மாந்தன் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், தான் பிறந்த இனத்தின் பயனாலன்றி, தனக்குரிய திறைமகளின் காரணமாகவே ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்ளவும் கூடிய வழிவகைகளை வழங்கும்