பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

31


ஒரு சமுதாய அமைப்பே, சமுதாய முன்னேற்றத்துக்கு மிக முதன்மைான அளவு கோல் ஆகும் என செயின்ட் - சைமன் கருதினார். இந்தச் வழிவகைகள் தொழில்மயமான ஒரு சமுதாயத்திலேயே உருப்பெற முடியும் என்றும் அவர் நம்பினார். அனைத்து மக்கள் உழைப்பு, மையப்படுத்தப்பட்ட பொருளியல் செயலாக்கம், மக்கள்மீது அரசாட்சி என்பதற்குப் மாற்றாக பொருள்களின் மீது அரசாட்சி (இதன் மூலம் பொருளாதாரத்தில் அரசியல் களையப்படும்) ஆகியவை இந்தச் சமுதாயத்தின் சிறப்பியல்புகளாக இருக்கும், செயின்ட்-சைமன் தமது தொழில்மயமான சமுதாயத்தில் தனியார் உடைமை, முதலீடு, ஆக்கம், ஆகியவற்றுக்கும். அதேபோல் உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் உள்ள வேற்றுமைக்கும் இடம் அளித்திருந்தபோதிலும், அந்தச் சமுதாயம் அதன் மக்கள் அனைவருக்கும் அரும்பெரும் வளத்தையும் மகிழ்ச்சியையும் அறத்தையும் உறுதிப் படுத்தும் ஆற்றல் படைத்தது என நம்பினார்.

ஆனால் தனியார் உடைமையைக் காப்பாற்றி வைத்திருந்தால், "மக்கள் மீது அரசாட்சி" என்பதற்கு மாற்றாகப் "பொருள்களின் மீது அரசாட்சி" என்ற நிலையைக் கொண்டு வருவது முற்றிலும் அருஞ்செயமாகும். இந்தக் கூறுதான் அவர்களது மாபெரிய குறிக்கோளுக்கும் அதன் கருத்தியல் தன்மைக்கும், நடைமுறை நோக்கு சற்றுமில்லாத் தன்மைக்கும், அவர்கள் கூறிய வழிகளில் அதனை நிறைவேற்ற இயலாத்தன்மைக்கும் உள்ள முரண்பாட்டை தெள்ளத் தெளிவாகப் புலப்படுததுகின்றது.

போரியரின் கொள்கையிலும் இதே இடை வெளியைத்தான் காண்கிறோம்; அதாவது எதிர்காலத்தைப் பற்றிய மாபெரும் திட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சற்றும் எய்த இயலாத