பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வருங்கால மானிட சமுதாயம்


தன்மையையும்தான் காண்கிறோம். போரியரின் குறிக்கோளான சமூக மனிதரின் சமுதாயம் "இசைவான" கோட்பாடுகள் நடைமுறையில் செய்யப்பட்டுவரும் சமுதாயமாகும். அங்கு ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின் மகிழ்ச்சிக்குப் பொருந்திய வகையில் தனது இன்பத்தைத் தேடிக் கொள்கிறான். ஆக்க உழைப்பில் எல்லோரும் பங்கெடுப்பதால், உழைப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேற்றுமையை ஒழிப்பதும் உறுதியாகிறது; மேலும், உழைப்பில் எதிரீடு ஏற்படுவதற்கும், உழைப்பை நாலாவகையாக்கும் விருப்பம் தோன்றுவதற்கும், அதேபோல் போரியர் "ஆர்வர்" என்று குறிப்பிடுகின்ற, பொருள்களைப் படைப்பதில் தடுக்க முடியாத அந்தச் சமூக மாந்தரின் சமுதாயம் இந்த ஆங்வங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நிலைமைகளையெல்லாம் உருவாக்குகிறது. வேறு பல கூறுகளோடு அது மாந்தனின் வேலை செய்யும் உரிமையையும் உறுதிப்படுத்துகின்றது. அறிவியல், தொழில் நுட்ப அடிப்படையில் அமையும் பொருளியல் வளர்ச்சி அங்கு அனைத்து பொருளாயத வறுமையையும் போக்கிவிடும். அங்கு நகர்ப்புறத்துக்கும் சிற்றூர்ப் புறத்துக்கும் வேற்றுமை இல்லை; பெண்கள் வீட்டு வேலைச் சுமைகளிலிருந்து விடுபட்டிருப்பர்; அதனால் சமுதாயத்தில் சரிசமமான இடத்தைப் பெற்றிருப்பர். பிள்ளைகள் சமுதாய உழைப்பின் அடிப்படையில் வளர்ந்து ஆளாக்கப்படுவர்; மேலும் மக்களின் நடத்தைக்கு மாபெரிய நல்லொழுக்கங்களே வழிகாட்டும் கோட்பாடாகும் எனப் வெளிப்படுத்தப் பட்டிருக்கும்.

போரியர் சமூக மாந்தரின் சமுதாயம் பற்றிய ஒரு விரிவான திட்டத்தையே தீட்டிவிட்டார். அது ஓர் உலக சமுதாயமாக இருக்கும்; அதில் பல்வேறு சமன்மைக் கூட்டுக் குடும்பங்கள் - பலாங்கிகள் ஒன்றோடொன்று