பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வருங்கால மானிட சமுதாயம்


நிகழ்கால சமுதாயத்தின் துன்பங்களுக்கெல்லாம் பகிர்வு முறையே ஒரே காரணமாகும் என ஓவென் கருதினார். எனவே பண மாற்றுக்கு மாற்றாக நேரடியான பண்டமாற்று முறையைக் கொண்டு வந்து விட்டால், இந்தத் துன்பங்களை வெற்றி காண்பது ஏற்றதாகிவிடும் என்று நம்பினார். ஏனைய எல்லா கனவுலக சமன்மையர்களையும் போலவே, ஓவெனும் மக்களின், தொழிலாளி வகுப்பின் படைப் பாற்றலில் நம்பிக்கை வைக்கவில்லை; அவர் முதலாளிகளையே நம்பினார். அவர் வகுத்துள்ள சமுதாய அமைப்பு அவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று என்று கருதினார்.

அனைத்து சமன்மை பொதுவுடைமைக் கொள்கை களையும் விளக்குவது நமது நோக்கமல்ல. இதேபோல் பிற நாடுகளிலும் பிற புகழ் பெற்றவர்கள் இருந்தனர். சாடன்றாக, மெகலியர் போன்ற சில கனவுலக நாட்டின் எழுத்தாளர்கள் பொதுமக்கள் புரட்சியின் மூலமே சமன்மை குறிக்கோளை எய்த முடியும் என்று கருஙாதினர். அவர்களில் 19ஆம் நூற்றாண்டின் சிறப்பு வாய்ந்த உருசியச் சிந்தனையாளரான என். சி. செர்னிசெவ்சுகியும் ஒருவர். ஆனால் இத்தகைய கொள்கைகள் அனைத்தும் கருத்துருவத்தில் பல திட்பமான கூறுகளில் பிழையாகவே இருந்தன.

பொதுவாக, இத்தகைய ஆசிரியர்களெல்லாம் ஓர் கருத்தியல் சமுதாயம் வடிவத்தோடு "இருக்கக்கூடிய இடமாக" மாறிவிட முடியும் எனக் கருதினர். சான்றாக, 1823இல் செயலாய்வுக்கான ஒரு பலாங்கிக் கூட்டுக் குடும்பத்தை நிறுவினால், அது மறு ஆண்டிலேயே செயல்படத் தொடங்க முடியும் என்றும், 1828-க்குள் சமுதாய மாற்றம் நிறைவாகிவிடும் என்றும் போரியர் நம்பினார். ஓவெனுக்கோ பொதுவுடைமை அடிப்படையில் ஒரு சமுதாயத்தைக் கட்டியமைக்க கூடிய