பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

35


வரை பத்தாண்டுக் காலமே போதுமானதாகத் தோன்றிற்று. இத்தகைய சமுதாயத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே முனைந்து ஈடுபட்டவர்களும் - இந்தச் சிந்தனையாளர்களும் அவர் தம் ஆதரவாளர்களும் - இருந்தனர்.

செயலாய்வுகள்

1832 செப்டம்பரில் ஒரு "சமூக மனிதரின்" வேளான் தொழில் துறைக் குடியிருப்பின் நூற்றாண்டு விழா பாரீசு நகரின் சுற்றுப்புறப் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அந்தக் குடியிருப்பை, போயெர் உயிரோடு இருந்த காலத்திலேயே முனைவர் பாடெட் - டுல்லாரிலின் என்பவர் கான்டி -"சுர் வெசுகிரே என்ற தமது பண்ணையில் நிறுவியிருந்தார். அதே சமயத்தில், கசுஸ் என்னுமிடத்தில் ஒரு சிறிய இரும்புத் தொழிற்சாலையின் அடிப்படையில் காடென் என்பவர் 1859-க்கும் 1865-க்கும் இடையில் கட்டிய பாமிலிசுடெர் என்ற குடியிருப்பும் இருந்து வந்தது.

அந்தக் குடியிருப்பு வெற்றிகரமாக நடந்து வந்ததா? அந்தோ கான்டி சுர் - வெசுகிரேயில் இருந்த "சமூக மாந்தரின் குடியிருப்பு" ஏதோ ஒரு வகையான கூட்டுறவு விடுமுறைக் கால விடுதியைப் போல் எப்போதோ உருமாறிப் போய்விட்டது; ஆக்கம், பகிர்வு, பண்டப் பயன்பாடு, பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் சமன்மை அடிப்படையில் மாற்றியமைப்பதற்காக நிறுவப்பட்டிருந்த பாமிலிசுடெர் குடியிருப்பினர்களோ அனைத்து வகுப்புப் போராட்டங்ளிலும் உழைப்பாளி வகுப்பின் எதிரிகளாகவே செயல்பட்டனர்.

போரியரின் கருத்துகளிலிருந்து விலகிச் சென்றதுதானா இத்தகைய தோல்விக்குக் காரணம்? கான்டி சுர் - வெககிரேயில் இருந்த குடியிருப்பு எந்தக்