பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

37


அரசியல் சட்டமானது ஓவென் தீட்டிக் கொடுத்த வண்ணம் அப்படியே நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கை விரிவாக்கங்களின் போது 32 உடைமை, உழைப்புக்கேற்ப பகிர்வு ஆகிய அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பொதுவுடைமைக் கழகமாக மாறுவதே அந்தக் கூட்டுக் குடும்பத்தின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது. இந்த மாறுதலுக்கான காலம் மூன்றாண்டுகள் என குறிக்கப்பட்டது. ஆனால் 1826 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே குடியிருப்பின் வளர்ச்சி திட்டமிட்ட இலக்குகளையும் மிஞ்சிக்கொண்டு வளர்ந்து விட்டதாகவும், பொதுமைக் குறிக்கோளை எய்துவதற்கு எல்லாம் அணியமாகி விட்டதாவும் ஓவென் தீர்மானித்துவிட்டார். பிப்ரவரி 5ம் தேதியன்று பரிபூரண சமன்மை கொண்ட கூட்டுக் குடும்பத்துக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் புதிய கூறு என்னவெனில், சமுதாய உடைமையைத் தவிர ஒவ்வொருவரும் உணவையும் உடையையும் உறையுளையும் பெறும் உரிமையும், அத்துடன் அவர் எந்த அளவுக்கு வேலை செய்பவராயினும் அவரது வாழ்வுக்கான உரிமையும் இதன்மூலம் வழங்கப்பட்டது. அனைத்து தண்டனை களும் அன்பளிப்புகளும் ஒழிக்கப்பட்டன. சட்டம் செய்யும் அதிகாரம் பொதுருக் குழுவுக்கு உரியது: செயலாட்சி அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு உரியது; அமைப்புக்குழு பொதுக்குழுவுக்கு வாரா வாரம் அளிக்க வேண்டும். -

இவ்வாறெல்லாம் இருந்த போதிலும், பிணக்குகள் விரைவிலேயே தோன்றிவிட்டன. அரசியல் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்டவில்லை. முதலில் "புதிய ஒற்றுமை"யிலிருந்து இரு கூட்டுக் குடும்பங்கள் விலகிச் சென்றன; 1827 மார்ச்சில் மேலும் இரண்டு குடும்பங்கள்