பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

39



எவ்வாறாயினும், 1847 மே மாதத்தில் கேபட் இக்கேரியாவுக்குப் புறப்படுங்கள்! என்ற வேண்டுகோளை வெளியிட்டார். அந்த வேண்டுகோள் சொத்துக்களெல்லாம் பொதுவாக இருக்கும், பகிர்வுகளெல்லாம் தேவைகளின் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு "புதிய துறக்க"த்தில் குடியேற வருமாறு விடுத்த அழைப்பாகும். 1848 பிப்ரவரி 3-ஆம் நாள் ரோம் என்ற கப்பல் "முதல் முன்னணிப்படை"யான 69 இக்கேரியர்களைச் சுமந்து கொண்டு, ஆவ்ரேயிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றது. 'கேபட் பாப்புலேர்' என்ற தாளிகையில் எழுதிய வண்ணம், "மாந்த வரலாற்றின் மாபெரும் துணிகர முயற்சி" தொடங்கியது. "இக்கேரியாவிலிருந்து ஏராளமான புதிய தேனிக்கள் உலகை மாற்றியமைப்பதற்காக உலகமெங்கனும் பறந்து செல்லும்" என்று கேபட் நம்பினார்.

இக்கேரியாவின் கதையை விரித்துச் செல்வதில் எவ்விதப் பொருளும் இல்லை. அது தொடர்ச்சியாகத் தோல்விகைளையே கண்டு வந்தது என்று சொன்னால் போதும். அமெரிக்காவுக்குச் சென்ற இரண்டாவது முன்னணிப்படை"யில் 1,000 முதல் 1,500பேர்போவார்கள் என்றே கூறப்பட்டது; ஆனால் 19 பேர் தான்் சென்றனர். ஆக மொத்தம் அந்தப் புதிய கூட்டுக் குடும்பத்தில் கேபட்டின் தலைமையில் 487 பேரே இறுதியில் சேர்ந்திருந்தனர். அதிலும் அந்தப் "புதிய துறத்தை" உருவாக்குவதற்கான தொடக்க முயற்சிகளைத் தொடங்கு முன்பே, இக்கேரியன் சமுதாயத்திலிருந்து 200 பேர் விலகிச் சென்று விட்டனர். இக்கேரியர்களின் எண்ணிக்கை ஒரு முறை அதிகரிப்பதாகவும் மறுமுறை குறைவதாகவும் நிலையில்லாமல் மாறிக் கொண்டே யிருந்தது; அதன் பொதுவுடைமைக் குறிக்கோளோ என்றும் போல் எட்டாக் கனியாகவே இருந்து வந்தன. இடையறாத பிணக்குகளால் கேபட்டே தமது இறப்புக்குச்