பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வருங்கால மானிட சமுதாயம்


கூறுகள் இடம் பெற்றிருந்தன. அவை: நல்லொழுக்க நெறி, பகுத்தறிவு, மாந்த இயல்பு ஆகியவற்றின் மீது மட்டும் அவர்கள் வைத்த நம்பிக்கைகளும் நன்னெறி மொழிகளும் ஒரு கூறு: பொதுவுடைமை அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் படைத்த, வரலாற்றின் மூலம் அவ்வாறு செய்து முடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த ஒரே உண்மையான ஆற்றலை, அவர்கள் மக்களிடத்திலும், அதற்கும் மேலாக தொழிலாளி வகுப்பிலும் சற்றேனும் இனங்காண முடியாது போன ஏலாத்தன்மை மற்றொரு கூறாகும்.

கருத்தியல்வாணர்களின் இரக்கமெல்லாம் பொது மக்களின் பால், தொழிலாளி வகுப்பின்பால், இருந்தது என்பது உண்மை. எனினும் அவர்கள் அம் மக்களைச் சுரண்டலுக்குரிய பொருளாகத்தான் கருதினர்ர்களேயன்றி, வரலாற்றுக்குரியவர்களாகக் கருதவில்லை.

(காம்பனெல்லா தொடங்கி) சமன்மை எழுத்தாளர்கள் பலரும் தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் உயர்வான உற்பத்தித் தரத்தையும் பொதுவுடைமை யோடு சரியாகவே தொடர்புப் படுத்திக் கூறினர். அவர்களில் சிலர் (செயின்ட் - சைமன், போரியர்) நடைமுறை முன்னிட்டு வரலாற்று வளர்ச்சி கருத்துக்கள் மூலம் "மனித அறிவின் கோரிக்கைகளை" வரையறுக்கவும் கூட முயன்றனர்; சமன்மையை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில்தான் எய்த முடியும் என்றும் நம்பினர். ஆனாலும் 18-ஆம் நூற்றாண்டின் முதலாளிய அறிவியக்க வாணர்களைப் போலவே, புனைவியல் சமன்மைகளும் தக்கவகையான வரலாற்று வளர்ச்சி பற்றிய தமது முடிவை அதே "மாந்த அறிவின்" அடிப்படையில்தான்் அமைத்தனர். ஆனால் அறிவை எது பெருக்கமடையச் செய்தது? குறிப்பிட்ட திசை வழிகளில் வரலாற்றைச் செலுத்திச் செல்லுமாறு அறிவைத் துண்டியது எது?