பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

43



வரலாறு அதன் உரிய முறைகளின்படியேதான் வளர்ச்சி பெறுகிறது என்று முதன் முதலில் கூறியவர்களில் விக்கோவும் ஒருவர். ஆனால் அறிவை இயக்கிச் செல்லும் முறைகளை அவரால் கண்டுணர முடியாதுபோன ஏதுவானால்,தெய்வ முடிவால் விதிக்கப் பெற்ற மாற்ற முடியாத முறைகளால்தான் அறிவு பெருக்கமடைகின்றது என்ற முடிவுக்கே விக்கோவும் வந்தார். வேறு வகையாகச் சொன்னால், கடவுள் வகுத்த மாபெரும் திட்டப்படி அமைந்த ஏதோ ஒரு "குறிக்கோள் வரலாறு" தான் இருந்தது. இந்தக் காரணத்தால், "தெய்வ முடிவின் அறிவுக்கொத்த திருத்தமான சமைய நூல்களை" விக்கோ ஒரு "புதிய அறிவியல்"மாகக் கருதினார்.

அறிவு வளாச்சியின் காரணங்களையும் போக்கு களையும் பற்றிச் சிந்தித்த சில கனவுலகவாணர்களும்கூட்டாக, போரியர் - இதே முடிவுக்கே வந்தனர்.

இவ்வாறாக, சமன்மை கம்யூனிச குறிக்கோள்களைச் செயலாக்கும் பொறுப்பு தெய்வ முடிவின் பால் சுமத்தப்பட்டு விட்டது. எனவே ஏழைகள் பணக்காரர்கள் என்று வேற்றுமை பாராட்டாமல், எல்லாச் சமுதாய ஆற்றல்களின், அனைத்து மக்களின் ஒற்றுமையின் மீது நம்பிக்கை வைப்பதும் தருக்கமுறையில் பொருத்தமாகவே இருந்தது. இந்தக் கருத்து நிலையிலிருந்து கவனித்தால், பொதுவுடைமை மாற்ற அடிப்படையில் அமையும் சமுதாய ஒற்றுமையை வகுப்புப் போராட்டம் குலைக்கத்தான் செய்யும். இந்தக் காரணத்தாலேயே பாட்டாளி இனம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தைத் தொடங்கியவுடனேயே, மாபெரும் உட்டோப்பியர்களின் தொண்டர் கோடிகள் அதற்கு எதிராகக் கிளம்பி விட்டனர்.

மாபெரும் கருத்தியல் வாணர்களின் திட்டங்கள் வரலாற்றின் உண்மையான உள்ளடக்கத்துக்கு மாறாகச்