பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழைத்து வரச்செய்து, எங்கள் சுவர்க்கத்தில் தங்க வைத்தார். ஆனால் பரிதாபம், ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுக் கொள்ள, சங்கத்து இளைஞர்கள், தொட்டில் கட்டி எடுத்துச் சென்று அவர்களை அடக்கம் செய்தனர். அது அம்மாவையும் விட்டு வைக்கவில்லை. ஆயினும் தர்மமோ, தரித்திரமோ, அவரை அன்று காப்பாற்றிவிட்டது. ஆனால்-

நாங்கள் அந்தத் தோட்டத்திலிருந்துதான் தண்ணிர் எடுத்துக் கொண்டிருந்தோம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தண்ணிர் மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி மாடுகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு, அந்த இடத்தைக் காலி செய்தோம். மீண்டும் வாழ்க்கை கேள்விக் குறியானது.

மனிதாபிமான உதவிகளே, மக்களுக்கு எதிராகத் தோன்றி -னால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் போது, வி.ஸ். காண்டேகர் போன்றோரை நினைவு கூறி ஆறுதல் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவ்வுலகில் மனிதத்தன்மைக்கும் சுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. சுகமாக இருக்க வேண்டுபவர் புலியைப் போல் மற்றவர் ரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருத வேண்டும். நியாயம், தியாகம், நாணயம், நம்பிக்கை, மனிதத் தன்மை ஆகிய சொற்களை எவனால் மறக்க முடியாதோ, அம் மனிதன் இந்த உலகில் சுகம் அனுபவிக்கத்தகுதியானவன் அல்லன் என்ற உண்மைதான் அது !

நண்பர்களே ! இது முன்னுரையா? அல்லது சுயசரிதமா? என அலுத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு குயிலின் கீதமல்ல. அடிபட்ட மானின் தீனக் குரல். திருமண வீட்டில் மங்கல இசையை ரசிக்கும் நம்மால், மரணம் நிகழ்ந்த வீட்டின் அவலக் குரலைக் கேட்பது கடினமே.

" எனதருமைக் குழந்தாய் ! நீ என்றும், எந்த நிலையிலும், மல்லிகை மலராகவே இரு. உன்னிலிருந்து கமழ்வது நறுமணமாகவே இருக்கட்டும். பிறரைப் பற்றி வருந்தாதே.

மற்றவர்களும் மல்லிகையாகவே இருக்க வேண்டும் என

41