பக்கம்:வேமனர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொடர் மொழிகள், மரபுத் தொடர்கள் இவற்றின் விரிந்த எல்லையில் மிகவும் பழக்கப்பட்டவர் அவர்; தன்னுடைய சொந்தச் சுரங்கத்தின் கணிப்பொருள்களின் கலவையினின்றும் புதிய தொடர் மொழிகளையும் மரபுத் தொடர்களையும் புதிதாக உண்டுபண்ணும் தனித்திறமையையும் பெற்றிருந்தார். அவர் சொற்சுருக்கத்தையும் பொருள்செறி தொடர்களையும் கையாள்பவர். மனநிலை மட்டிலும் அவர் வயமிருப்பின் திட்ப நுட்ப வாசகங்களையும், சொற்சுருக்கக்கூற்றுக்கள், முதுமொழிகள், ஆணைமொழிகள், நன்னெறியுரைகள், அறிவுரைகள் ஆகியவற்றையும் பேரளவில் குவித்துத் தள்ளமுடியும். ஆனால் தெலுங்கு இலக்கியச் செருக்குடையவருக்கு இதுபோதாது.அமரகோசத்தையும் வேறு நிகண்டுகளையும் மனப்பாடமாகத் தெரிந்தவர்கள், கட்டுப்பாடான இலக்கண விதிகளுக்கும், யாப்பு விதிகட்கும் இணங்க எழுதக்கூடியவர்கள்; பேரொலிகளை விளைவிப்பனவும் தாடையுடையக்கூடியனவுமான வடமொழிக் கலப்புத் தொடர்களைக் கையாளக்கூடியவர்கள், அணி இலக்கண நூல்களை யாத்துக் காலத்துக்கொவ்வாத உவமைகளையும் பழங்கால உருவகங்களையும், நாட்பட்ட புனை கருத்துகளையும் தொகுத்துக்கூற வல்லவர்கள்- சுருக்கமாகக்கூறினால், மரபு வழிப்புலமைபெற்று மரபுவழித் தலைப்புக்களில் மரபு முறைப்படி எழுத வல்லவர்கள் மட்டிலுமே மேதக்க வரிசைக்கவிஞர்களுடன் சேர்க்கக்கூடியவர்களாக இருந்தனர்; மற்றவர்கள் எவ்வளவுதான் இயல்பான சொல் திறமையுடனும் அறிவாழத்துடனும் திகழ்ந்தபோதிலும், தம்முடைய சிந்தனையிலும் சொல்திறனிலும் முன்மாதிரியாக இருந்தபோதிலும் அவர்கள் அரைகுறைப் படிப்பாளிகளாகக் கருதப்பெறக்கூடியவர்களாகவே இருந்தனர்.

இறுதியாக, வேமனர் அரசர்களையோ மன்றங்களையோ அல்லது அரசவைக் கவிஞர்களையோ மதிக்கக்கூடியவர் அல்லர். ஆதரவாளர் உவப்பதற்காகக் கவிதையெழுதி அற்பத்தொகை சம்பாதிப்பது கவிஞர் தொழிலையே இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறுகின்றார், சுதந்திரமாகவும் கட்டுப்பாடற்றும் இயங்கக்கூடிய திண்ணிய ஆன்மாதான் உண்மையான கவிஞராக இருக்க முடியும் என்றும் அத்தகைய கவிஞரே நீடித்து நிலைபெற்றிருக்கக் கூடிய செய்தியைத் தரக்கூடுமென்றும் அவர் நம்புகின்றார்.பிறப்பு

இறப்பு பற்றிய இறுதி உண்மைகளைச் சிந்தித்துக் கணநேரத்தோற்றமாகவாவது காண்பதற்கும், அவற்றைக்கொண்டு மனித இனத்திற்குச் சேவை செய்யவும் பயன்படுத்த இயலாத படிப்பும் புலமையும் பயனற்ற அலங்காரங்களாகும் என்று அவர் உறுதியாகக் கூறுகின்றார். கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் புலவர்களும் அண்மைக்காலம் வரையில் ஏதாவது ஒரு மன்றத்துடன் இணைக்கப்பெற்றிருந்தாலும் அதிகாரமும் செல்வமும் உடையவர்களிடமிருந்து

10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/17&oldid=1242411" இலிருந்து மீள்விக்கப்பட்டது