பக்கம்:வேமனர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆதரவுகளையும் உதவிகளையும் பெற விரும்பினதாலும் வேமனர் அவ்வாறு கூறுவது அவரது ஆணவமான போக்காகும் என்று நம்பியதனாலும் அவர்கள் அவரை வெறுத்தனர்; இலக்கியப் போர்க் கருவிகளில் மிகவும் ஆற்றல் வாய்ந்ததான மௌன வெறுப்பினால் அவரைக் கொல்லவும் முயன்றனர். ஆனால் சமூகசமயச்சீர்திருத்த வாதியாக இருந்த வீரேசலிங்கமும்கூட ஏன் இந்தக் கேடிழைக்கும் கூட்டத்தினருடன் சேர்ந்தார்? வேமனரின் நாகரீகமற்ற நாட்டுப் புறச்சீடர்களால் சிறிதும் அரக்கமாயத்தையொத்த தந்திரமுடைய புகழ்க்குறைப்போராலும் மாசு கற்பிப்போராலும் பெரிதும் வேண்டுமென்றே சுமத்தப்பெற்ற சில செருகுப் பாடல்களின் இழிவுத்தன்மையும் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த தன்மையும் கிராம்வெல்லிடமிருந்தது போன்ற அவருடைய கடுமையான ஆசாரமுடைமை வல்லந்தமாகத் தாக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

நீண்டகாலமாக வேமனர் தெலுங்கு இலக்கிய நிறுவனத்திற்குப் பழியுரையாக இருந்தபோதிலும், வேமனரின் இலக்கியப் படைப்பைப் பற்றிச் சிறிதளவு அறிந்த ஒவ்வொரு மேனாட்டுச்சிந்தனையாளரும் எழுத்தாளரும் அதனால் மிகவும் நன்கு கவரப்பெற்றனர். இவர்களுள் மிக முன்னதாகக் கவரப்பெற்றவர் ஃபிரெஞ்சு மடத்தைச் சார்ந்த ஜே. ஏ. டூபாய் என்பவராகும். 1871-இல் முதல் ஆங்கிலப் பதிப்பாக வெளியிடப்பெற்ற தன்னுடைய "இந்து ஒழுக்கங்கள், வழக்கங்கள், ஆசாரங்கள்" என்ற நூலில் அந்த மடாதிபதி மெய்யறிவுச்சார்ந்த போக்கில்' எழுதியுள்ள சில இந்தியக் கவிஞர்களைக் குறிப்பிட்டு மேலுங்கூறுகின்றார்:

மிகப்புகழ்வாய்ந்தவர்களுள் ஒருவர் வேமனர். . . . . . .. ரெட்டி வகுப்பைச் சார்ந்தவரும் கடப்பை மாவட்டத்தில் பிறந்தவருமான இந்த மெய்விளக்க அறிஞர் பதினேழாவது நூற்றாண்டின் இறுதியில் இறந்தார். நான் கண்ட பல்வேறு சுருக்கங்களிலிருந்து அவருடைய படைப்புக்கள் எனக்கு மிக்க கவர்ச்சிகரமாகத் தோன்றுகின்றன. அவை தெளிந்த கூரிய அறிவுத்தன்மையாலும் தன்னுண்மை (சுதந்திரம்)யாலும் புகழுடன் திகழ்கின்றன.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சென்னை சிவில் சர்வீஸைச் சேர்ந்த சார்லஸ் ஃபிலிப் பிரெளன் வேமனருடன் நெருங்கிய பழக்கத்துடன் அறிமுகமானவர். எனினும், அவர் அறிவாற்றலுள்ளவராக இருப்பதைவிட மொழிவாணராகவே அதிகமாகத் திகழ்ந்தார்; அவர் வேமனரை அணுகும்முறை முற்றிலும் மொழியைச் சார்ந்தே இருந்தது. அவர் பதிவு செய்தபடியே, "நடை மிகவும் எளிதாகவும் மிக விரிந்த நிலையில் பல்வகைப் பெருக்கத்தலைப்புக்

11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/18&oldid=1242412" இலிருந்து மீள்விக்கப்பட்டது