பக்கம்:வேமனர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேமரும் ஆவர். ஒருவருக்குப்பின் ஒருவராக வேமனரின் இரண்டு அண்ணன்மார்களும் ஆட்சிப் பீடத்திலமர்ந்தனர். முன்னவர் கி.பி. 1396-இலும் பின்னவர் கி.பி. 1424-இலும் அரியணை ஏறினர். இராச்சவேமனர் தம்முடைய படைத்தலைவர் ஒருவரால் கொலை செய்யப்பெற்றதால் அரச மரபுக்கும் ஒருமுடிவு ஏற்பட்டது. கோமட்டி வேமரின் ஆவி முன்னறிந்து தெரிவித்தபடியே அலியா ரெட்டியின் குடும்பம் கி.பி. 1328லிருந்து கி.பி.1428வரை, சரியாக நூறு ஆண்டுகள், ஆட்சி செய்தது.

கடைக்குட்டியாக இருந்தபடியாலும், மூன்று குமாரர்களுள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தபடியாலும் வேமனர் பிள்ளைப்பருவத்தில் அளவற்ற அன்பு காட்டும் பெற்றோர்கள் அதிக இடங்கொடுத்து செல்லத்துடன் வளர்க்கப்பெற்றார். இந்த அளவற்ற உரிமையும் செல்லமும் அவரை முற்றிலும் கெடுத்தன. சிறுவனாக இருந்தபோது வேமனர் தான்னோன்றியாகவும் அடம் பிடிப்பவராகவும் காணப்பெற்றார். காளைப்பருவத்தில் அவருடைய முக்கிய தொழில் கன்னியர் வேட்டையாடுவதே, கன்னியர் இன்பத்தில் முரட்டுத்துணிச்சலுடன் ஆழங்கால் பட்டார். திருமணம் அவருடைய காமவெறியை மட்டுப்படுத்தும் என்று நம்பிய அவர்தம் பெற்றோர்கள் அவரைத் திருமணம்புரிந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனல் அவர் ஏதாவது ஒரு சிறு சாக்குப்போக்குச் சொல்லிப் பெற்றோர்கள் குறிப்பாகத் தெரிவிக்கும் ஒவ்வொரு சரியான மணத்துணைவியையும் மறுத்துவிட்டார். தன் பெற்றோர்களின் வயோதிக பருவத்தில் அவர் அவர்கட்குப் பல்வேறு மனத் துன்பங்களைத் தந்தார்; அவர்கள் இறந்த பிறகு அவர்மீது அவர்கள் கொண்டிருந்த சிறிதளவு கட்டுப்பாடும் அகன்றது. அவருடைய இரண்டு அண்ணன்மார்களும் அவரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலவில்லை. இராச்சவேமரின் துணைவியாகிய நரசமாம்பா என்ற அரசியாரிடம்மட்டிலும் அவர் சிறிதளவு மதிப்பு வைத்திருந்தார். அந்த அம்மையாரின் செல்வாக்கு தான் ஊர்சுற்றும் காமுகரைத் தத்துவக் கவிஞராக மாற்றியது.

இந்த மாற்றத்திற்குச் சற்று முன்னதாக வேமனர் ஒரு பரத்தை வீட்டில் வசித்து வந்தார். அவள் அவருடைய சத்தையும் சொத்தையும் இறுதிவரை உறிஞ்சிவிட்டாள். என்றபோதிலும் அவர் அவளுடையவஞ்சகங்களால் ஏமாற்றப்பட்டவராகவே இருந்தார்; அவளை மகிழ்விப்பதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால் ஒருநாள் வேமனர் தன் அண்ணியார் அரசி நரசமாம்பாவின் அணிகலன்களை யெல்லாம் கொண்டுவரின் தான் அவற்றைக் கொண்டு அணி செய்துகொள்ளலாம் என்று அவள் கேட்டபொழுது அவர் தீய இடர்ப்பாடான சிக்கலில் அகப்பட்டுக்கொண்டார்.

24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/31&oldid=1206697" இலிருந்து மீள்விக்கப்பட்டது