பக்கம்:வேமனர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைஞனே, நீ நற்பேறு பெற்றனை. என் முன்னே வந்து உபதேசம் பெறுவாயாக."

ஒரு நொடிப்பொழுதில் ஒரு பழுத்த யோகியாக மாற்றமடைந்து வேமனர் குகையை விட்டு வெளிப்போந்து நேராக அபிராமனைச் சென்றடைந்தார். அவனுக்கு முன்னால் கீழேவிழுந்து அடிபணிந்து வணங்கி அவனுடைய மன்னிப்பைக் கோரினார். கழிவிரக்கத்துடன் கன்னங்களில் கண்ணீர் ஆறாகப் பெருகிய வண்ணம், வேமனர் இவ்வாறு கூறினர்: "அடியேன் உனக்குச் செய்த பெருந்தீங்கிற்கு ஈடாக, உன்னுடைய பெயர் என்றும் மறையாவண்ணம் செய்துவிடுகின்றேன்." இந்த வாக்கு நிறைவேற்றும் பாங்கில் வேமனர் தம்முடைய பாடல்களின் பல்லவியாக அபிராமனின் பெயரை அமைத்தார்.

பெரிய யோகி நிலையில் வேமனர் இயற்கைமீறிய ஆற்றல்களை வெளிக்காட்டினர். அவர் காட்டு முலாம் பழங்களைப் பயிர் செய்தார்; அவர் அன்புடன் தன் சீடர்கட்கு வழங்கிய ஒவ்வொரு பழமும் பொன் விதைகளைக் கொண்டிருந்தது; ஆனால் அவர் தோட்டத்தினின்றும் களவாடப் பெற்ற ஒவ்வொரு பழத்திலும் புழுக்கள் நிறைந்திருக்கின்றன. சில சமயங்களில் அவர் தமக்கு விருந்தளிப்பவர்களின் இல்லங்களினுள் மலசலங்கழித்தார். அவரை அவர்கள் அருவருப்புடன் வெளியேற்றினால், அந்த மலத்தின் நாற்றம் எப்பொழுதுமே அந்த இடத்தைவிட்டு அகலாதிருந்தது: இதற்கு மாறாக அவர்கள் அந்த ஞானி குழந்தைத் தன்மையுள்ள தம் செயலால் தம்மைச் சிறப்பித்தார் என்று கருதினல் அந்த மலம் பொன்னக மாறியது! பக்தியுடன் அவரை வரவேற்றால் அவருடைய சிறுநீரும் அங்ஙனமே திரவநிலைப் பொன்கை மாறியது.

பகுத்தறிவுள்ள நம் மனம் தூங்கிய நிலையிலும் மலம் சிறுநீர் இவற்றின் வாடையைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. கட்டாயத்தினால் நாம் இந்த இடத்தில் இயற்கை மீறின கட்டுக்கதை உலகினின்றும் வெளியேற வேண்டியதுதான்.

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/34&oldid=1243354" இலிருந்து மீள்விக்கப்பட்டது