பக்கம்:வேமனர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. "அவர் ஒரு மனிதர்"

“அவரொருகற் பண்புடையார்; தகவுறுமச் சான்றோர்
ஆற்றுபணி யனைத்திலுமிவ் வேற்றமறிங் திடலாம்
அவரைப்போல் மாண்புடைய மனிதர்களை யுலகத்
தன்புடனே தேடுகின்றேன்; காணவில்லை, அம்மா!”

--செகப்பிரியர்

ர் ஒழுங்கான வாழ்க்கை வரலாற்று ஆசிரியருக்கு இன்றியமையாதவையாக இருக்கும் பிறந்தநாள், பிறந்த இடம், தந்தையார் பெயர், அன்னையார் பெயர் போன்ற செய்திகளில் தெளிவாக வழிகண்டுவிட்டால் வேமனரின் பாடல்களில் காணப்பெறும் அகச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சீராக அமைத்துவிடமுடியும். அவர் வாழ்க்கையைப்பற்றிக் கூறும் கவிஞர். அவர் வாழ்க்கையை நேரடியாகக் கண்டவர். அவர் வாழ்க்கையைப் பற்றி வேடிக்கையாகப் பேசினார்; கேலி செய்தார்; வாழ்க்கையைக் கண்டு இகழ்ச்சியாகச் சிரித்தார்; அதனோடும் அதனைப் பற்றியும் எள்ளி நகையாடினர். அவர் வாழ்க்கையைக் கண்டு பெருமூச்சுவிட்டார்; அதில் துன்பப்பட்டார்; அதனைக் கண்டு அழவும் செய்தார். அவர் வாழ்க்கையுடன் போரிட்டார்; அதில் சில சமயம் வெற்றியடைந்தார்; சில சமயம் தோல்வியும் உற்றார், ஆனால், எல்லாக் காலங்களிலும் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியடையவும் செய்தார். அவருக்கு வாழ்க்கை ஒரு சத்திய சோதனையாகவும் ஒரு புதிய கண்டுபிடிப்பின் நெடும் பயணமாகவும் இருந்தது. வேமனர் வாழ்க்கையில் மிக ஆவலாகவும் மிக விரிவாகவும் இடைவிடாமல் ஊசலாடியதால், அவர் வாழ்க்கையையும் தம்முடைய வாழ்க்கையையும் பொதுவான வாழ்க்கையையும் கவிதையில் அமைத்துக் காட்டினர். ஓரிடத்தில் மாதிரியாக அமைந்துள்ள சொற்றொடரிலும், பிறிதோரிடத்தில் புலப்படச்செய்யும் கருத்திலும், வேறோரிடத்தில் தனிப்பட்ட இயல்புடனுள்ள ஒப்புமையிலும் கணநேரத் தோற்றமாக அவருடைய வாழ்க்கையைக் காணலாம். அதனை நாம் அவருடைய அன்புக்குரிய தப்பெண்ணங்களிலும் வெளிப்படையாக உள்ள உயர்வெண்ணங்களிலும் பார்க்கலாம். அவருடைய விருப்புகளிலிருந்தும், வெறுப்புகளிலிருந்தும், கடுந்துயிரிலிருந்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/45&oldid=1244252" இலிருந்து மீள்விக்கப்பட்டது