பக்கம்:வேமனர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவற்றை அகற்றவே முயல்கின்றார், ஆனால் அவை அவரைத் தொடரவே செய்கின்றன; ஆகவே அவர் இழிந்த மனப்போக்கில் படிப்படியாகக் கீழிறங்குகின்றார்.

வேமனரை எழுச்சியற்றவராகவும் அடிக்கடி மனம்மாறுகின்றவராகவும், ஓய்வுபெறுகின்றவர்போலவும் காணும் அவருடைய சிற்றன்னை தம்மீது வெறுப்புக் கொண்டிருக்கின்றாரோ எனக் கருதுகின்றார். புதிய மணப்பெண்ணாக மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கும் அவர், துயரம் நிறைந்த அவருடைய முகத்தைக்கண்டு அச்சந்தருகின்ற அளவுக்கு எரிச்சலூட்டும் தன்மையுடையவராகின்றார். அவர்தம் எரிச்சலூட்டும் தன்மை விரைவில் ஆத்திரமாகவும் சினமாகவும் வளர்கின்றது. அவருடைய தந்தைக்குத் தெரியாமல் அவர் வேமனரைக் கொடுமையாக நடத்தத் தொடங்குகின்றார்; நாளடைவில் வெளிப்படையாகவும் இடைவிடாமலும் கொடுமையாக நடத்துகின்றார். அவர் என்ன சொன்னாலும் அல்லது எதைச் செய்தாலும் அவரிடம் குற்றத்தையே கண்டு ஓயாது திட்டுகின்றார். அவருக்கு முதல் நாள் இரவில் எஞ்சிய உணவையே இடுகின்றார். அகழெலிப்புற்றுபோன்ற மிகச்சிறிய தவறுகளையெல்லாம் மலைபோன்று பெரிதாக்குகின்றார்; அவருக்கு விரோதமாகவே அவர் தந்தையாரிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்கின்றார். அவர் தந்தையாரால் நையப் புடைக்கப் பெறுங்கால் அவருடைய துன்பங்கண்டு தனக்குள் மகிழ்கின்றார். அவருடைய முதல் குழந்தை பிறந்தபிறகு, வேமனரின் நிலைமை மிகவும் மோசமாகின்றது. பெருமிதத்தன்மையும் உணர்ச்சியுமுடைய அவர் எதிர்த்து நின்றிருக்கலாம்; ஆனால் அவர் தம் அன்னைபால் கொண்ட அன்பும் மதிப்புணர்ச்சியும் தம்முடைய தந்தையின் வாழ்க்கையில் தம் அன்னை கொண்டிருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் தம்மீது சுமத்தும் இகழ்ச்சியுரைகளையும் வசைச் சொற்களையும் அமைதியுடன் தாங்கிக்கொள்ளவேண்டும் என்றே உணரச் செய்துவிடுகின்றன.

வேமனர் இப்பொழுது பின்-குமரப் பருவத்தை எட்டுகின்றார். தம் இல்லத்தில் அவர் அடையும் மகிழ்ச்சியற்ற நிலை அவரை ஒரு பரத்தையின் இல்லத்தை நாடச்செய்து விடுகின்றது. அவர் எதையும் அரைகுறையாகச் செய்பவரல்லராதலின், நாடறிந்த கயவராகி, இருபதுக்கு மேற்பட்ட வேசியருடன் துயில்கின்றார். அதன் பிறகு அவர் அவர்களுள் ஒருத்தியால் மயக்கப் பெறுகின்றார். அவளோ இளமையும் கவர்ச்சியும் உடையவள், கலைத்திறம் மிக்கவள். அவள் பாட்டிசைக்கின்றாள்; தோடி ராகத்தில் மேம்பாடடைந்தவள். வீணையிலும் வல்லவள். முரட்டுத் தன்மையும் அருவருப்பான தோற்றத்தையும் உடைய வேமனர்

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/48&oldid=1244256" இலிருந்து மீள்விக்கப்பட்டது