பக்கம்:வைணமும் தமிழும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வைணவமும் தமிழும்



5. இரட்டைக்காப்பியங்கள் :

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரம் படைத்தவர் (இரண்டாம் நூற்றாண்டு) இளங்கோ அடிகள், தொடர்ந்து மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பெற்றது. இந்த இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன.

(அ) சிலப்பதிகாரம் : இக் காவியத்தில் பல இடங்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன.

மாங்காட்டு மறையோன் உறையூருக்கருகில் கோவலன் கண்ணகியுடனும், கவுந்தியடிகளுடனும் ஒர் இளமரக்காவில் பயணிகள் தங்கும் இருப்பிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களைச் சந்திக்கின்றான். இவன் தென்திசையினின்றும் வடதிசையை நோக்கி வருபவன். கோவலன் அவனை நோக்கி, ‘யாது நும்மூர்? ஈங்கென வரவு?’ என்று வினவுகின்றான்.[1]இந்த இரண்டு வினாக்களில் முன்னதினும் பின்னது சிறப்புடைத் தாதலின் அதற்கு விடைகூறும் இடத்தில் திருவரங்கம் திருவேங்கடம் இவற்றின் வருணனைகள் வருகின்றன.

நீல மேக நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம்
விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளிப் பலர்தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பின் கிடந்த வண்ணமும்.[2]

  1. சிலம்பு- காடுகாண்- அடி 23
  2. மேலது.-(25-40)