பக்கம்:வைணமும் தமிழும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“வேதத்துக்கு “ஓம்” என்னுமது போல் "ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்” என்று அருளிச் செய்து உள்ளமையால் அது தனி திவ்வியப் பிரபந்தமே என்பது உறுதியாகிறது. மேலும் பெரியாழ்வார் திருமொழியில் முதல் நானூறு பாசுரங்களுக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியானம் செல்லரித்துவிட்டதனால் அந்த நானூறு பாசுரங்களுக்கு மட்டும் மணவாளமாமுனிகள் வியாக்கியானம் செய்துள்ளார் என்பதை நூலாசிரியரும் வேறோர் இயலில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்படி மணவாளமாமுனிகள் அருளிச் செய்த வியாக்கியானம் "வண்ணமாடங்கள்சூழ்” என்று தொடங்குகிற பதிகம் முதற்கொண்டுதான் உள்ளது. திருப்பல்லாண்டுக்குப் பெரியவாச்சான் பிள்ளை உரையே உள்ளது. இதுவும் திருப்பல்லாண்டு தனி திவ்வியப் பிரபந்தமே என்ற கருத்தையே உறுதிப்படுத்துகிறது. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஓரிடத்தில் “திருப்பல்லாண்டுதொடங்கிட”என்று அருளிச்செய்துள்ளமையால் அதைத் தனி திவ்யப்பிரபந்தமாகக் கொள்ள முடியாது என்று ஆசிரியர் கூறுகிறார். இது திருப்பல்லாண்டு தனி திவ்யப் பிரபந்தமே என்பதை உறுதிப்படுத்துமேயன்றி வேறல்ல, ஈடு முப்பத்தாறாயிரப்படி உரையில் “பொய்ந்நின்றஞானமும் தொடங்கி இவ்வளவும் வர ...”என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. திருவிருத்தமும், திருவாய்மொழியும் தனித்தனி திவ்யப் பிரபந்தங்களாக இருக்கச் செய்தேயும் அருளிச் செய்தவர் ஒருவரே என்ற காரணத்தால் நம்பிள்ளை அவ்வாறு அருளிச் செய்துள்ளது போலவே பெரியவாச்சான் பிள்ளையும் அருளிச்செய்துள்ளார் என்று கொள்வதில் தடையேதுமில்லை. மேலும் “பல்லாண்டு பல்லாண்டு தொட்ங்கி” என்றருளிச் செய்யாமல்

vii