பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. வைணவ புராணங்கள்

சங்க இலக்கிய ஆராய்ச்சியே ஆராய்ச்சி என்று ஒரு காலத்தில் மக்கள் கருதி வந்தனர். சங்க இலக்கியம் என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழ் இலக்கியங்களில் ஓர் ஐந்நூறு ஆண்டுக்காலப் பகுதி; பிற்காலப் பகுதிகள் இதுபோல உள்ளன. இவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்பதைத் தமிழ் ஆய்வாளருக்கு அடியேன் சொல்லத் தேவையில்லை. இவற்றில் ஒன்று 'புராண இலக்கியம்’ என்ற துறையாகும். இத்துறை காலத்தால் பிற்பட்டதாயினும் அளவாலும் பொருளாலும் மிக விரிந்தது; இத்துறையில் கவனம் செலுத்தினால் சிறந்த பயன் தரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இடைக்காலத் தமிழில் அளவால் ஒரு பெரும் பகுதி புராண இலக்கியம். இதனைப் புறக்கணிக்கின்ற அல்லது தூற்றுகின்ற எந்த வரலாறும் முழுமையுடையதாகாது. இடைக்காலம் என்ற ஒரு பெருங்கால அளவின் (நானூறு ஆண்டுக்கால அளவின்) மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறப்புமிக்க இலக்கியத்துறையை நோக்காத வரலாற்றாராய்ச்சி ஆராய்ச்சி ஆகாது. இக்கால மக்கள் பெரும்பாலும் சமயத்துறையிலேயே மனம் செலுத்திஇருந்தனர். அதன் விளைவுகளில் ஒரு பகுதியே புராண இலக்கியம் ஆகும்.

புராண இலக்கியங்கள் பல சிறந்த இலக்கியச் சுவை உடையன என்பதை அத்துறையில் ஈடுபாட்டுடன் நோக்கி ஆய்பவர்களே நன்கு அறிவார்கள். புராண இலக்கியங்களுள் சிறந்தவை பிற எந்தச் சிறந்த இலக்கியங்களுக்கும் குறைவானவை அல்ல என்பதைத் தெளிவாகவும் உணர்வார்கள். உலக நீதிகள், ஆட்சி முறை, நாட்டு வருணனை, அகத்துறை முதலியவற்றைப் புராணங்களுள் காணும்போது, இவை பிற எந்த இலக்கியத்துக்கும் பின் தங்கியவை அல்ல என்பதும் புலனாகும். நறுந்தொகையும் நைடதமும் பாடும் ஆற்றல்

1