பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


உடைய அரசன் புராணம் படைக்கப் புகுந்தால் அப்புராணத்தில் எவ்வாறு இலக்கியச் சுவை குன்றிப்போகும்? என்பதைச் சிந்தித்து நோக்கினால் உண்மை பளிச்சிடும்.

புராண இயல்புகளாகச் சிலவற்றைக் கருதலாம்:

(1) எல்லாப் புராண ஆசிரியர்களும் மேற்கொள்ளும் சில சிறப்பான தன்மைகளைச் சுட்டிக் காட்டலாம். போர் என்று வந்தால் எல்லா ஆசிரியரும் மிகுதியாகப் போர் வருணனையில் ஈடுபடுகின்றனர். இதற்கும் சில காரணங்கள் உள்ளன. ஒன்று, போர் காப்பியத்துள் ஒர் அங்கம் (செலவு இகல் வென்றி). இவர்கள் தண்டியாசிரியர்க்குப் பிற்பட்டவர்களாதலால் போரை மிகுத்துச் சொல்கின்றனர். இரண்டு, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, அரசியல் நிலையற்றுக் கொந்தளிப்பு மிகுந்திருந்த காலம். எனவே, போர்களைத் தாங்களே நேரில் கண்டும் அல்லது நேரில் கண்டவர்களிடம் உசாவியும் இவர்கள் வருணிக்கின்றனர் என்று கருதலாம். மூன்று, பொதுவாக இவர்கள் எழுதுகோல் வீரர்களேயன்றி வாள் வீரர்கள் அல்லர். இவர்கள் வாளேந்திப் போரிடாவிடினும் தங்களின் பாடல் மூலம் வாளேந்திப் போரிடுகின்றனர்.

(2) தங்களுக்குத் தெரிந்தவற்றையெல்லாம் விரித்துக் கூறும் முயற்சி மற்றொன்று. பல புராணங்கள் இலக்கணச் செய்திகளை விவரிக்கும். இலக்கணத்துக்காக யமகம், திரிபு, மடக்கு முதலியன அதிகம் செய்து பாடுகின்றனர். மரங்கள் என்று வந்தால் இருபது வகைகள்; யாவும் அடைமொழி விரவாமல் கூறப் பெறும். தெரிந்த தலம் எல்லாம் ஒப்புவிப்பார்கள். சமயம் என்று வந்தால் சைவ சித்தாந்தச் செய்திகள், வைணவச் செய்திகள் யாவும் இதில் அடங்கும். பூசை என்று வந்தால் எல்லாக் காரியங்களும் இடம் பெறும். இஃது இயல்பேயாகும். சமயத்தை வலியுறுத்திப்பாடுதலே இவர்கள் புராணம் செய்ததன் நோக்கமன்றோ? வைணவம் என்று வந்தால் பெரும்பாலும் தசாவதாரங்களையும், ஆழ்வார்களையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

(3) மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் மேலோங்கி நின்றமையால், ஒழுக்க நெறி பிறழ்ந்தால் நரக வாழ்வே பலன் என்பது

2