பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


இந்த நூலின் இசைத்ததென் காரணம் என்னில்
அந்தமாதி மற்று இடையிலும் ஞானமாம் அதனால்
சிந்தை சேரும் வெந்துயர் தவிர்த்திட இதுதெரிந்தான்

என்று சொல்லி புராண படனப் புண்ணியப் பயன் சொல்லி முடிக்கின்றார்.

இக்காலத்தில் எழுந்த பெரும் புராணங்களில் உள்ளது போல இவரும் காலஅளவு, உலகளவு (நாவலந்தீவு, ஏழு தீவு, சூரிய மண்டலம், மேலுலகு கீழுலகு, நரகம்) வருணாசிரமம் முதலான பொருள்களைப் பெருக்கிக் கூறுகிறார். பகவானுடைய வரலாறுகள் நிகழ்ந்த இடங்கள் பலவாதலால் நாட்டுப்படலம்,நகரப்படலம் என்ற பகுதிகளைத் தனியே விரிக்கவில்லை. வழக்கிழந்து போன பாக்களான காப்பியத்துறையும் வஞ்சித்துறை முதலாயினவும் இதனுள் பயில்கின்றன. பாகவத புராணம் வியாச முனிவரால் அவருடைய புதல்வரான சுக முனிவருக்குச் சொல்லப்பெற்றது. இவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொன்னார். இதைப் பிற்காலத்தில் சூத முனிவர் நைமிசாரண்ய முனிவர்களுக்குச் சொன்னார் என்பது வரலாறு.

நூற்பொருள்

இதனைக் கந்த வாரியாக விளக்கம் பெறுவதைக் காட்டுவோம். இதில் 12 கந்தம் அடக்கம்.

முதல் கந்தம்: இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. 'மாயவன் அம்சாவதாரம் உரைத்தது' என்பது முதல் அத்தியாயம். இதில் 22 அவதாரங்கள் கூறப்பெற்றுள்ளன. கவுமாரம், ஏனமாய் இருநிலம் எடுத்தான், 'மறைசொல் நாரதனாய் பாஞ்சராத்திரம் வகுத்தான், நரன்-நாராயணனாய் தவம் விரித்தான், கபிலனாய்த் தவம் உரைத்தான், தத்தாத்திரியனாய் பிரகலாதனுக்குத் தத்துவம் உரைத்தான், மகப்புருடன், விடபன், மீனுரு, கபடம், தன்வந்திரி, மோகினி,நரமடங்கல், வாமனன், பரசுராமன், வியாசன், தசரதராமன், பால்வண்ணராமன், கண்ணன், புத்தன், துரகமாய் எழுவான், புராண வரலாறு, தருமபுத்திரன் அரசு பெறுதல், கண்ணன் துவாரகை அடைதல், கண்ணன் துவரை கடைந்த அத்தியாயத்தில்

20