பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இதிகாச பாகவதம்


அவதாரமும் அழகாக அமைந்துள்ளது. துருவன், பிருது மன்னன் முதலியோர் வரலாற்றில் இரண்டு பாடல்கள்: துருவன் திருமாலைக் காண்கின்றான்.

மண்டலம் நிறைந்த திங்கள்
வதனமும் கமலக் கண்ணும்
குண்டலம் சுடரும் காதும்
குறுநகைப் பவள வாயும்
தண்துழாய் அலங்கல் மார்பும்
தடக்கையோர் நான்கு மாகக்
காண்டனன் மறையும் காணாக்
கரியவன் உருவம் அம்மா.
வானே, வளியே, வயங்கொளியே,
வனமே, மண்ணே, இவ்வைந்தின்
ஊனே, உயிரே, உயிர்க்குயிரே,
உன்னும் உறுவர் உளத்தூறும்
தேனே, நங்கள் பெருவாழ்வே,
சிவனே, அயனே, இருவருக்கும்
கோனே, நின்னைக் குணமில்லேன்
குறித்தேன் சொல்லிப் பழிச்சுக்கோ?

ஐந்தாம் கந்தம்: இது 8 அத்தியாயங்கள் கொண்டது. பிரியவிரதன் மரபு, பரதன் வரலாறு, நாவலந்தீவு, கங்கையில் பிதிர்க்கடன் செய்வதால் வரும் நற்பயனைக் கூறும் பாடல் (1233);

புலங்கொள் சங்கம்வை கங்கதம்
பொருந்திய நாகம்
நலங்கொ ணாரத முதலிய
நல்வரைக் குலங்கள்
துலங்கு மேருவின் சுற்றிலும்
கமழுமால், துகள்தீர்த்து
23