பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்கம் 82 அகத்திணைக் கொள்கைகள்

நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த பழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடலோதம் ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற் றெம்மோடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம்"

(நேமி-சக்கரத்தையுடைய கடல் ஒதம்-கடல் நீர்.) என்று ஆன்றோர் இலக்கியங்களில் கூறப்பெறுதலால், தலைவன் தன் தேர் முதலியவற்றோடு தோழிமாட்டுச் செல்லுதலும் உண்டு என்பது அறியப்படும். இன்னும் தலைவன் அப் பெண்டிர்க்குத் தலையும் மாலையும் கையுறையாகக் கொண்டு செல்லுதலும் உண்டு என்று அகப்பொருள் நூல்கள் நுவலும்.

இம்மதியுடன் பாட்டை ஆசிரியர் தொல்காப்பியனார் , "குறையுற உணர்தல் முன்னுற உணர்தல் இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்என மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே."

என்று குறிப்பர். எனவே, மதியுடம்பாடு குறையுற உணர்தல்: முன்னுற உணர்தல், இருவரும் உள்வழிஅவன்வர உணர்தல் என்று மூவகைத்தாக நடக்கும் என்பது அறியப்படும். இம் மூன்றினும் ஒன்று கண்டுழி அவரவர் குறிப்பினால் புணர்ச்சி உணரும்: என்பர் இளம்பூரணர். இனி, இம் மூன்றையும் ஒவ்வொன்றாக விளக்குவோம். குறையுற உணர்தல்: தலைவன் தன்பால் வந்து குறையுற்று நிற்க, அவன் உள்ளக் கருத்தினை தோழி உணர்தல் 'குறையுற உணர்தல்' ஆகும். அஃதாவது, தலைவியும் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினும், தோழி தனித்துள்ள இடத்தாயினும், தலைவன் புதியவன் போலப் புகுந்து, 'இங்கே சில விலங்கு போந்தன உளவோ?', 'இளையர் போந்தனர் உளரோ?. எனவும், 'நும்பதியும் பெயரும் யாவை?' எனவும் தலைவன் உசாவ, 'எம்மினாயதோர் குறையுடையவன் இவன்' எனத் தோழி கருதுதல். - 4. சிலப்-கானல்வரி. 36 3. களவியல்-37 (இளம்). முன்னுற உணர்தல் (7) என்னும் இறையனார் அகப்பொருள் நூற்பா பெரும்பாலும் இந் நூற்பாவோடு ஒப்புமை உடைத்தாதல் காண்க. 6. டிெ-37 (இளம் உரை).