பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அகத்திணைக் கொள்கைகள் என்று கருதப்படும். அல்லது உம், புகவும் போகவும் அருமையுடை மையாகலானும் ஆகாது என்பது' என்று விளக்குவர். காதலர்களின் குறியிடச் சேர்க்கைக்கு இராப்பொழுதே பகற் பொழுதினைவிடப் பெரிதும் பொருந்துவதாகும். மக்களின் நெஞ்சறிவினை அது வெளிப்படுவதற்குரிய வாயில்களாகவுள்ள ஐம்பொறிகளுள்ளும் கட்பொறி யொன்றே மிகுதியும் இழுத்து வெளிப்படுத்து வதாகும். எனவே, கட்பொறியொன்று மட்டிலும் அவ்வைம்பொறிகளுள்ளும் அடங்கி நிற்குமாயின், மக்கட்குப் புறப்பொருள் வாயிலாகக் கழியும் நெஞ்சறிவு ஒருபெரிது புறம் படாது உள்ளடங்கும். கட்புலன் அடங்க அடங்க உள்ளுணர்ச் சியும் மிகுந்து கொண்டேயிருக்கும். மிகுதலோடன்றி, அது செறி தலும் செய்யும். செய்யவே, இவ்வாற்றால் கட்புலன் அடங்கிப் புறப்பொருளுணர்ச்சி ஒடுங்கி அகமடங்கும் காலம், பொழுது சாய்ந்து மாலை கவியும் இராக் காலமேயாகும். அதுவே, அகப் பொருளுணர்ச்சி மக்களுள்ளத்தில் உதித்தெழுந்து செறியும் காலமாகும். இவ்வுண்மையினைத் தெளிய வைத்தற்கே வள்ளுவப் பெருந்தகை, காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்." என்று கூறினார். இதனால் மக்களுள்ளத்தில் எழும் அகப் பொருளுணர்ச்சி என்னும்மலர் காலைநேரத்தில் மொட்டாயிருந்து நடுப்பகலெல்லாம் மலரும் தகுதி பெற்று மாலை பொழுதில் முழுதும் மலர்ந்து மலராகும் என்னும் அரும்பொருள் விளக்கம் பெறுவது கண்டு மகிழத் தக்கது. ஆகவேதான், அகப் பொருளுணர்ச்சி இயற்கையாகவே மிக்கெழுந்து விம்மும் இராக் காலம் குறியிடப் புணர்ச்சி விழைவுக்குக் காதல் மக்களால் பெரிதும் விரும்பப்பெறுகின்றது என்பது அறியத் தக்கது. இக்காரணத் தாற்றான் இறையனார் அகப்பொருளுரையாசிரியரும், கள வொழுக்கம் மறைத்தலைத் தனக்கு அணிகலமாக உடைத்தாக லான் இரவுக்குறி பொருந்தியதுணைப் பகற் குறிபொருந்திற் றன்று' என்று உணர்த்தினார் என்பதும் சிந்திக்கத் தக்கது. அல்ல.குறிப்படுதல் : மேற்கூறிய இருவகைக் குறிகளுள் இரவுக்குறியில் தலைவன் வருமிடத்துப் பற்பல அடையாளங்கள் 32. குறள் - 1227 (பொழுது கண்டிரங்கல்). 33. இறைகள -குத்திர்ம்-18 (உரை)