பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்ட மரபுகள் 10} அலரைத் தவிர்க்கவும் முடியாது ஊர்வாயை மூடவும் முடி யாது, என்ற எண்ணத்தால் காதலர்கட்குத் திருமண நினைவும் பெருகுகின்றது. மணப்பது உறுதி என்ற துணிவாலும், இனிமேல் களவொழுக்கத்திற்கு வாய்ப்பில்லை என்ற நசையாலும் சில ஆட வர்கள் களவின்பத்தை நீட்டிக்க விரும்புவதும் உண்டு. இத்தகைய ஆடவன் ஒருவனுக்குத் தலைவி, மானாவூர் அம்பல் அலரின் அலர்கென நானும் நிறையும் நயப்பில் பிறப்பிலி' என்ற பட்டத்தையும் சூட்டுகின்றாள். இங்ஙனம் 'நானும் நிறையும் நயப்பில் பிறப்பிலி என்று சினந்து கூறினும், வெறுப் புடையாள் போல நமக்குத் தோன்றினாலும், இதுவும் தலைவன் பால் அவளது கெழுமிய காதலையே உணர்த்தும். இதனை நன்கு அறிந்தவன் வள்ளுவத் தலைவன். உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்." (உறாதவர்-நொதுமலர்: செறார்-கோபியாதவர்) : என்று தலைவன் கூற்றில் வரும் வள்ளுவம் காண்க. அலரைப் பொருட்படுத்தாத துணிவுடைய ஆண் பிறப்பு போலன்று பெண் பிறப்பு: அது நாண் பிறப்பு. வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார் கழியுநோய் கைம்மிக அணங்காகி யதுபோலப் பழிபரந் தலர்துற்ற என்தோழி அழிபடர் அலைப்ப அகறலே கொடிதே." என்ற தோழியின் வாக்கில் இதனைக் காணலாம். துணை யெனத் தொழுத தெய்வமே அன்பனுக்குக் கொடுமை செய்தது என்னுமாப்போலே, காதலனாகிய நீ காதலிக்குக் கொடியவனா கின்றாய். உன்னால் அவளுக்குப் பழிதோன்றவும் அலர் பரவவும் மனம் அலையவும் காண்கின்றேன். இனி நீ அவளை விட்டு அகல்தல் கொடிது (வரைந்து வாழ்தலே தக்கது) என்று தலைவன் நாணுமாறு தோழி இடித்துரைப்பதை இதில் கண்டு மகிழலாம். . 56. கவி-60. 57. குறள்-1096 58. க்வி-132