பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அகத்திணைக் கொள்கைகள் பேராசிரியரும் திருக்கோவையார் உரையில் இதனை ஒருவழித் தணந்துறைதல், உடன் கொண்டு போதல், தோழியான் வரைவு முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து வரைந்து கோடல் இம் மூன்றினுள் ஒன்று முறைமை" என்று உரைத்துப் போயினர். இவற்றினை அடுத்துக் காண்போம். iw சேட் படை தோழி மதியுடன்பட்டதனை அறிந்த பின்பு தலைவன் அவளை அணுகித் தன் குறையை முடித்துக் கொள்ள முயல்வான். கையுறையாகத் தழை முதலியன கொண்டு வந்து அவற்றை ஏற்றுத் தன் தலைவிக்குத் தந்து அவளை எப்படியாகிலும் தன்னுடன் கூட்டி வைத்திடுமாறு தோழியை வேண்டி நிற்பான். அப்போது அவள் தன் தலைவியை இவனோடு கூட்டுவிக்கும் தன் முயற்சியின் அருமையும், அத்தலைவியின் அருமை பெருமையும், இங்ஙனம் நீளக் களவுப் புணர்ச்சியில் நின்றொழுகாது உடனே மணம் முடித்துக் கொள்ளலே நன்று என்ற எண்ணமும் அவனுக்குத் தோற்றுவித்தற் பொருட்டு, ‘ஐயனே நும் தலைவியை நீவிர் இப்பொழுது கூடுதல் இயலாது; என்னால் கூட்டுவித்தலும் இயலாது” என்று பற்பல ஏதுக்கள் கூறி எளிதில் இணக்கம் காட்டாமல் மறுப்பாள். இவ்விடத்துக் காவலர் கருகுவர்; தீவிர் வரற்பாலிரல்லீர், விலகிச் செல்லுதிர்' என்பன போன்ற காரணங்களைக் கூறிஅவனைத் தம்பால் நெருங்க வொட் டாமல் விலக்கி நிறுத்தி வைப்பாள். இங்ஙனம் தலைவியை அடைதல் எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அஃது அத்துணை எளிதன்று என்றுதோன்றுபடி தோழி சேட்படுத் துவள்.சேட்படுத்தலாவது, அகற்றுதல், துரவிடல் என்றுபொருள் படும்சொல்லாகும்; மறுத்தல் என்பது கருத்து நடத்தல் என்பது நடை' என்று நின்றவாறு போலச் சேட்படுத்தல்' என்னும் தல்' விகுதியேற்ற இத் தொழிற் பெயர்ச் சொல்லே சேட்படை என்று ஐவிகுதியேற்று நின்றது. ஈண்டுச் சேட்படுத்துதல் என்பது 52. திருக்கோவை-ஒருவழித் தணத்தல் என்ற துறையின் கீழ் இவ்விளக்கம் காண்க. -