பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 117 மகளைக் கூடுவதற்கு விரும்பி மேற்கொள்வதாகும். தாம் மேம் கொள்ளும் முயற்சிகள் யாவும் தோழியிடம் பலியாதபோது அவர் கள் தம்மிடம் மிக்கெழுந்த காமக் காழ்ப்பினால் தமக்குள்ள நாணத்தையும் ஆண்மையையும் இழந்து உடம்பெல்லாம் நீறுபூசி மார்பில் எலும்பு மாலையையும் தலையில் எருக்கம்பூ மாலையை சூடிக்கொண்டு தலைவியின் வீட்டிற்கு அருகில் நாற்சந்தியில் பனங்கருக்காற் செய்யப்பெற்ற ஒரு பொய்க் குதிரையின் மேல் ஏறி நிற்பான். அக்குதிரையைப் பிறரால் இழுப்பிக்கச் செய்து அவ்விடத்தில் கொண்டு நிறுத்துவான். அவன் கையில் அவனால் எழுதப் பெற்ற அவன் காதலியின் ஊரின் பெயர் அவள் பெயர் பொறிக்கப்பெற்ற ஒவியம் இருக்கும்; அதன் கீழ் அவன் ஊரும் பேரும் காணப்பெறும்." இங்ஙனம் தலைவன் குதிரை மீதேறி வெளிப்படையாகத் தன் கருத்தை எல்லோர்க்கும் தெரியும் படி ஆரவாரம் செய்து நிற்றலே மடலேறுதல் என்ற பெயரால் இலக்கியங்களில் வழங்கப்பெறும், இவ்வுண்மையை, மாஎன மடலும் ஊர்ப; பூவெனக் குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுட. மறுகின் ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப; காமம்காழ்க் கொளினே." (மா-குதிரை மடல்-பனை மடல்; கண்ணி-தலை மாலை; மறுகின்-தெருவில்: ஆர்க்கவும் படுப-ஆரவாரித்தலும் செய்வர்; பிறிதும் - இறத்தலும், காழ்க் கொளின் உள்ளத்தே மிகுந்தால்) என்ற குறுந்தொகைப் பாடலால் அறியலாம். மணிவாசகப் பெருமான் இதனை, - ஈசன சாந்தும் எருக்கும் அணிந்துஓர் கிழிபிடித்துப் பாய்சின மாஎன ஏறுவர் சிறுார்ப் பனைமடலே." (சசன-ஈசனுடைய கிழி-படம்: மா-குதிரை.) 80. தலைவன் பெயர் கிழியில் எழுதப்பெறும் வழக்கம். திருக். 76 ஆம் திருப்பாடலால் அறியப்பெறும். - 81. குறுந்- 17.குறுந் 182லும் இச்செய்தி வருகின்றது. 82. திருக்கோவை-74 - -