பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 121 (தொடலை-மாலை போலத் தொடர்ந்த: உழக்கும்.அநுபவிக்கும்; துயர்-காமநோய்) நாணொடு நல்லாண்மை வண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்’’ |நாண்-இழிவாயின செய்தற்கண் விலக்குவது: ஆண்மை-ஒன்றற்கும் தளராது நிற்றல்) என்ற திருக்குறள்களில் செவ்விதின் விளங்கிக் கிடத்தல் அறியத் தக்கது. - மடற்றிறம்' என்ற தலைப்புடன் திருக்கோவையாரில் ஒன்பது துறைகள் காணப் பெறுகின்றன. தலைவன் மடலேறு தலைத் தோழி தடுக்க முயல்வதாக அமைந்திருப்பது மடல் விலக்கு’ என்னும் துறையாகும். அகப்பொருள் நூல்களில் இத் துறைபற்றிய செய்திகள் மிக நயமாகக் கூறப்பெற்றுள்ளன. தலைவனுடன் பேசத் தொடங்கும் தோழி, நீங்கள் மடலேறுவீர் களேயாயின், உங்கட்குள்ள இரக்கத்தை யாரிடத்துச் செலுத்துவ வாகும்?' என்று வின்வுவாள். அதாவது, தலைவன் மடலேறு வானாயின், அதனையறிந்த தலைவி அதற்கு ஆற்றாளாய், மிக வருந்தி உயிர்விடுதலும் கூடுமாதலால், அவள்மாட்டு உண் மையில் இவன் அருளுடையனாயின் இங்ஙனம் மடலேறுவதாகக் கூறுதல் கூடாதன்றோ? ஆகவே, 'உங்கள் கழிபேரிரக்கத்தை உங்கள் தலைவியின்பாலன்றி வேறு யார்பால் செலுத்தப் போகின்றீர்கள்?’ என்கின்றாள். உண்மையிலேயே தலைவி.பால் மிக்க அன்பும் இரக்கமும் உடையவனாதலால் அவன் மடலேறுதல் அரிதென்று தோழி கருதுவாளாயினள். ஆதலால் இவள் இங்ங்ணம் கூறி விலக்கும் துறை அருளர்ல் அரிதென விலக்கல்’ என்னும் தலைப்பில் மணிவாசகப்பெருமான் மிக அருமையாகக் கூறியுள்ளார். இங்ங்ணம் கூறியும் அவன் அமையானாய் நிற்கக் கண்ட தோழி, நீங்கள் படம் வரையுங்கால் உங்கள் தலைவியின் பேச்சையும் நடையையும் எப்படி எழுதுவீர்கள்? என்று கேட்பது மொழி நடை எழுதல் அரிதென விலக்கல்’ என்று கூறுவதாக அமையும். அவை தாம் எழுத முடியாவாயினும் அழகின் திறம் வாய்ந்த அவளுடைய உறுப்புகளை மட்டிலும் அத்துணை எளிதாக எழுதிவிடுதல் 92. R-1133