பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அகத்திணைக் கொள்கைகள் இயலுமா?’ என்று கூறி விலக்குதல் அவயவம் எழுதல் அரிதென விலக்கல்’ என்னும் துறையாகும். யாழும் எழுதி எழின்முத்து எழுதி இருளின் மென்பூச் சூழும் எழுதியோர் தொண்டையும் தீட்டிஎன் தொல்பிறவி ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூர்இளமாம் போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே." (யாழ்-இசைக் கருவி (மொழியைக் குறித்தது); முத்துபல்லைக் குறித்தது); சூழ்-மாலை; பிறவி-பிறப்பு: எழுதா வகை-கூற்றுவன் தன் கணக்கில் எழுதா வண்ணம்; கொம்பர்-கொடி) என்ற திருப்பாடல் விளக்குவதாகும். இதில் சொல்லும் பொருளும் மிக அழகு பெற நிறுத்திக் கூறிய திறம் உணர்ந்து மகிழத்தக்கது. தலைவிஇங்ஙனம் மடலேறுதலை விலக்கல்' உடம்படாது விலக்கல்’ 'உடம்பட்டு விலக்கல் என்று இரண்டு வகையாகக் கூறப்பெறும். இங்ஙனம் கூறப்பெற்ற இரண்டு துறைகளினாலும் தலைவன் நெஞ் சமைந்து மடலேறுதலைத் தவிர்த்துநிற்பான். உடம்பட்டு விலக்கிய தோழியும் தலைவியை அவனுடன் இணக்குதற்பொருட்டு அவள் மாட்டுச் சென்று குறை நயப்புக் கூறுவாள். இவ்வாறெல்லாம் மடற்றிறம் அகப்பொருள் நூல்களில் விரித்துப் பேசப்பெறும். இங்ஙனம் தலைவன் மடலுர்தல் கண்டு அஞ்சித் தலைவியைக் கொண்டு வந்து தலைவனுக்கு மணம் செய்து கொடுத்ததை இலக்கியங்களில் காணலாம். - வருந்தமா ஊர்ந்து மறுகின்கண் பாடத் திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பொருந்தாதார் போர்வல் வழுதிக்கு அருந்திறை போலக் கொடுத்தார் தமர்.”* (மா - குதிரை மறுகு-தெரு, பொருந்தாதார் - பகைவர், வழுதி-பாண்டியன்; திறை-கப்பம்: தமர்-உறவினர்.) 23. திருக்கோவை.79 94 கவி-141,