பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அகத்திணைக் கொள்கைகள் பயிர்விளைப்பார் விலங்குகள் தவியா திருக்கும்பொருட்டுத் கழலைக் கண்ணாக உறுத்திப்பொய்மை வகையாற் பண்ணிவைத்த பெண்பாற்புலியைப் புணர்ந்து ஆண்புலி புனத்தின் நடுவே துயரம் தீரும் என்றது, வரைந்து கொள்ள நினையாது இக்களவிற் புணர்கின்ற இம்மாயப் புணர்ச்சியால் இன்பம் முடிய நுகர் கின்றான் என்பதாகும். ஆண்புலி பொய்ப் புலியைப் புணர்ந்து பையுள் தீரும் என்றது, தலைவன் உண்மையான காதலாலன்றிக் காமத்தான் மட்டும் தலைவியை விரும்பி இக்களவின்கண் மருவி இன்புறுகின்றான் என்பதைக் குறிக்கின்றது. அறவோனாயின் வரைந்து கொள்வான் அலனோ? என்று தோழி தலைவனுடைய அன்பின்மையை உணர்த்துகின்றாள். இப்பாடலில் வெறி நிகழ்ச்சியை உணர்த்தி வரைவு கடாதல் உணரப்படும். அன்னையொருத்தி தன் மகளின் காதல் நோய் முருகனால் வந்தது என்று தவறாகக் கருதி வெறியாட்டயர்கின்றாள். இதனைத் தலைவி தோழியிடம் கூறி அன்னையின் அறியா மைக்கும் வேலனின் அறியாமைக்கும் ஏன்? முருகக் கடவுளின் அறியாமைக்கும் கூட நகையாடுகின்றாள். இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே வெறியாடல் தான்விரும்பி வேலன்வரு கென்றாள்' (கறிமிளகுக் கொடி சிலம்பன்-குறிஞ்சி நிலத் தலைவன்; நோய்-காமநோய், கடம்பன்-முருகன்; வேலன்-வேல்மகன்) ஆய்வளை நல்லாய் இதுநகையா கின்றே மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்.'" (ஆய்வளை - அழகியவளை, .ெ வ ற்ப ன் - மலைநாடன்; மடவன்-அறிவிலி: குருகுபெயர்க்குன்றம் : கிரவுஞ்சமலை; கொன்றான்-முருகன்) நோய் நாடி நோய்முதல் நாடி, அதுதேணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் புரிதல் முறை. அன்னையோ இதனையறியாது எதுபற்றி வெறியாடினும் இறுதியாக இது முருகன் குறை 103. சிலப். குன்றக்குரவை-11 104. டிெ-12