பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் சுட்ட மரபுகள் $47 பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல் என்(று) ஒருநால் வகைத்தே வரைவு கடாதல். ' என்பது அவர் கூறும் விதி. இதில் பொய்த்தல் என்பது, தோழி யானவள் தலைவியைத் தலைவன் மணந்து கொள்ளும்படி செய்ய எண்ணித் தலைவனிடம் பொய்யாயினவற்றைத் தானே புனைந்து கறுதல். மறுத்தல் என்பது, தலைவன் குறிக்கண் வருதலைத் தோழி குறிப்பாகவும் வெளிப்படையாகவும் மறுத்தல், கழறல் என்பது, தோழி தலைவனிடம் அவன் தலைவியை மணந்து கொள்ளாமல் களவின்கண் ஒழுகுதல் அவன் நாடு முதலிய வற்றிற்கு ஏற்றதன்று எனத் தலைவற்குக் கூறுதல், மெய்த்தல் என்பது, தோழி தலைவனுக்கு மெய்யாயினவற்றை கூறுதல். இவை ஒவ்வொன்றுக்கும் உரியவையாகப் பல கிளவிக்களைக் காட்டுவர் அவ்வாசிரியர்." வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவியின் தோற்றப் பொலிவும் வருத்தமும் அயலார் கூறும் அலரும் கண்டும் கேட்டும் அவள் சுற்றத்தார் இத்செறிக்கும் செய்தியைக் கூறித் தலைவனை வரைவு கடாவல் நடைபெறும். இச் செய்தியைக் கேட்ட தலைவி தோழிக்குக் கூறுவாளாய் அமைந்த ஒரு பாடல் ஐங்குறுநூற்றில் உள்ளது." பெரும் பாலான பாடல்கள் தோழி தலைவனிடம் கூறயனவாகவே அமைந்திருக்கும். இளம்பிறை யன்ன கோட்ட கேழல் களங்கனி யன்ன பெண்பாற் புனரும் அயந்திகழ் சிலம்ப கண்டிகும் பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே.'" |கோட்டபமருப்புகளையுடைய, கேழல்-ஆண் பன்றி; பெண் பால்-பெண் பன்றி. அயம்ப-நீர் கண்டிகும்-நோக்குதி: பயந்தன-பசந்தன) - 行酉 ட்டுத் தலைவியின் பச்லை கூறி வரைவுகடாதலைப் பாடவில் காண்க. இங்கனமே தோழி பகற்குறிக்கண்ணே தலைவனை எத் இற்செறிப்பு, தோற்ற மாறுபாடுமுதலியவை கூறியும் தலைவனை வரைவு கடாவப்பெறும். தலைமகன் சிறைப்புறத்திலிருக்குங்கால் தோழி அவன் கேட்குமாறு தலைவியிடம் நீன் தலைவன் 137. நம்பிஅகப் - 165 !33. - 166 - 139. ஐங்குறு. 111 140. ഒു. - 254