பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(? த. T ழி யி AD .ே l-H --- itர 4 岛 墩” |5 3 வெஞ்சின உருமின் உரலும் அஞ்சுவரு சிறுநெறி வருத லானே." (ஆளில் பெண்டிர்-தாயதமகளிர், பதுவல்-பறித்த பஞ்சு, மழை-மேகம் நெடு வரை.நெறிய மலை; முடம்-முடப் பட்டு: குடம் மருள்-குடம் போன்ற; எம்-எம்பால்; காமம். அன்பு: கணிவது-மிகுதியாகக் கொண்டிருப்பது; உருமின். இடிபோல; உரலும்-முழங்கும்) களவின் வழிவந் தொழுகும் தலைமகன் இரவின்கண் வருதலை யறிந்த தோழி அவனை நெருங்கி மலை நாடனே, இரவின் கண்ணே கொடிய நெறியில் வருவதால் நீ சால்புடையை அல்லை’ என்று வெகுண்டு கூறி உள்ளுறையால் மணம் செய்து கொள்ள வருவாயாக’ என்றும், அங்ஙனம் வருவாயாகில் எமர் எதிர் கொண்டு மகட்கொடை நேர்வர் என்றும் தெளியக் கூறுவதை இப் பாடலில் கண்டு மகிழலாம். குறவர் மடமகள் பழவின் பழத்துச் சுளையை மந்தியை விருந்தாகக் கொண்டு ஒம்பும் என்றது, நீ மணம் செய்துகொள்ள வரின் எமர் நின்னை மணமகனாக ஏற்று மகட் கொடை நேர்வர் என்பதைக் காட்ட, 'பசித்து வந்த மந்தியையும் ஒம்பும் மலையையுடையையாயிருந்தும் நின்னை அடைக்கலம் புக்க இவள் அஞ்சாவாறு வரைந்தாய் அல்லையே' என்று இரங்கிக் கூறுகின்றாள். இததகைய நெஞ் சினையுடைய நின் மலையின் கண்ணே மஞ்சும் தவழா நின்றதே! இஃதென்ன வியப்போ!' என்று பொருளின் புறத்தே இறைச்சிப் பொருள் தோன்றி நிற்பதும் அறிந்து மகிழத்தக்கது. கலித் தொகைத் தோழி ஒருத்தி வரைவு நீட்டித்த நெய்தல் நிலத் தலைவன் ஒருவனைத் தெருட்டி வரைவு கடாவுவது நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதாகும். இங்குத் தலைவியின் தமர் வரைவுக்கு உடன்பட்டனர். தலைவனும் இசைவு தெரிவித் தனன். எனினும், யாதோ காரணத்தால் அவன் வரைவினை நீட்டிக்கின்றான். அத்தகையவனைத் தோழி கடுஞ்சொல் கூறித் தெருட்டுகின்றாள். துறைவ கேள்: - ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல் 148. நற். 353