பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் -- 155 சிறுநணி வரைந்தனை கொண்மோ பெரு நீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் - பறை தபு முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி யன்னஇவள் நலனே." (சிறுநணி-மிகக் குறுகிய காலத்தில்; வரைந்தனை கொள்மணம் புரிந்து கொள்; பெருநீர்-கடல்; வல்சி-உணவு: பறை தபு-பறக்கும் ஆற்றல் கெட்ட இருக்கும்.(செவ்வி) பார்த்திருக்கும்) - இதில் தலைவனே, இவள் அழகு வளம் தொண்டிப் பட்டினத்து 'வளனுக்கு ஒப்பாகும். தொண்டி வளனை அறிவையோ? வலைஞர்கள் கடலில் பிடித்துவந்த வளமான மீனை இரையாகக் கருதிச் செவ்வி பார்த்திருக்கும் பறக்கும் ஆற்றலிழந்த கிழ நாரை களையுடையது. ஆதலால் இவள் வனப்பு உனக்கே சொந்தமாகு மாறு வரைந்து கொண்டு அழைத்துப் போய் விடுக’ என்று தோழி நொதுமலர் வரைவினைக் காட்டித் தலைவனை எச்சரிக் கின்றாள். இதில் உள்ளுறையால் உணர்த்தும் நுட்பம் எண்ணி மகிழ்தற்குரியது. வலைவர் தந்த.இருக்கும் துறை என்பதில் வலைவர் தந்த கொழுமீனாகிய உணவைத் தின்றற்கும் பறத்தற் கும் ஆற்றலில்லாத கிழக்கொக்கு செவ்வி பார்த்திருப்பது போல எம் பெருமாட்டியை மகட்பேச ஏதிலார் பலர் வந்து செவ்வி நோக்கியுள்ளார்காண்’ என்ற கருத்து அடங்கியுள்ளது. இதில் தலைவியின் குடிக்குக் கடலும், தலைவனுக்கு வலை வீசிப் பிடிக் கும் பரதவரும், தலைவியை மணம் பேசி வந்தோர் இழிவிற்குக் கிழக் கொக்கும் உவமமாக்கப் பட்டிருக்கும் அருமைப்பாடு நினைந்து நினைந்து மகிழற்பாலது. ix. அறத்தொடு நிற் றல் . "அறத்தொடு நிற்றல்' என்பது, 'அறனறியாமை நிற்றல் என்றும், கற்பின்றலை நிற்றல் என்றும் பொருள்படும். அறன் என்பது பல பொருள்களையும் தழுவிய பொதுச் சொல்லாயினும் ஈண்டு பெண்ணுக்கு உரிய முதற் பண்பான கற்பையே குறிக்கும் 152. ஐங்குறு-180