பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அகத்திணைக் கொள்கைகள் SAAA AAAA SAAAAAS AAAAAeeiHHHSAASAASAAAS கற்பென்னும் சடைப் பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற் றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது இத் துறையின் பொருளாகும். தலைவியின் களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துங் கால் தலைவி ஏற்கெனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள். அறத் தொடு பொருந்தவே நடந்துள்ளாள் என்பதனை முதன்மையாக வலியுறுத்துவதே தோழியின் நோக்கமாகும். இறையனார் களவிய லுரையாசிரியரும், அறம் என்பது தக்கது, தக்கதனைச் சொல்லி, நிற்றல் தோழிக்கும் உரித்தென்றவாறு அல்லதுாஉம், பெண்டிற்கு அறம் என்பது கற்பு, களவின் தலை நிற்றல் என்பது உமாம்", " என்று குறித்திருப்பது ஈண்டு நோக்கத் தக்கது. களவொழுக்க, நிகழ்ச்சியைத் தொல்காப்பியரும் குற்றந் தீர்ந்த அறச் செய்கை யாகும்’ என்று கருதுவர். தோழியின் கூற்றுகளை யெல்லாம் தொகுத்துக் கூறும் ஆசிரியர், முன்னிலை அறன்எனப் படுதலென்று இருவகைப் புரைதிர் கிளவி தாயிடைப் புகுப்பினும் " (கிளவி-சொல்; புரைதீர்-குற்றம் தீர்ந்தl என்ற நூற்பாப் பகுதியினால் இஃது அறியப்படும். இப்பகுதியை நச்சினார்க்கினியர் 'அறன் எனப்படுதல் இருவகைப் புரைதிர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும் என்று உரை நடைப் படுத்தி 'அறன் என்று சொல்லப்படுந் தன்மை இருவர் கண்ணும் குற்றந் தீர்ந்த எதிர்ப் பாடென்று செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்றாயிடத்தும் செலுத்தினும்’ என்று உரை கூறுவர். அறத்தொடு நிற்றலைத் தொல்காப்பியர் புரைதிர் கிளவி என்று குறிப்பிட்டதைப் போலவே, இறையனார் களவியலாசிரியர் "மாறு கோள் இல்லா மொழி என்று குறிப்பிடுவர். தோழிக் குரியவை கோடாய் தேனத்து மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே. ' (கோடாய்-செவிலித்தாய்; கொள்தாய் எனப் பிரித்து, தாயாகக் கொள்ளப் படுவாள் எனப் பொருள் கொள்க, தேஎத்து-மாட்டு) 153. இறை. கள. 29-இன் உரை. 154. களவியல்-23:(நச்), வரி 41.2. 155. இறை. கள-14.