பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 163 கின்றாள். அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டு என்று கூறினால் அவர் யார்?' என்ற ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை யறிவதற்கு ஏதுவாகும். எனவே, இதனால் தோழி தாயரிடம் அறத்தொடு நிற்கின்றாள். அகநானூற்றுத் தோழி யொருத்தி செவிலிக்கு அறத்தொடு நிற்குந்திறம் நயமாக அமைந்துள்ளது. அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி அதன்திறம் யானும் தெற்றென உணரேன்.'" (பழங்கண் - துன்பம்; வினவுதி - வினவுகின்றனை; திறம் வந்தவழி, தெற்றென-தெளிவாக) என்ற பிடிகையுடன் தொடங்குகின்றாள். 'அன்னையே, நேற்று நாங்கள் வேங்கைப்பூப் பறிக்கச் சென்றோம். புலி, புலி என்று * அப்போது அச்சோலையின் வேறொரு பாங்கர் வேட்டையாடப் போந்த ஆடவன் ஒருவன் எம்மொலி கேட்டு அப்புவி சென்ற வழி யாதோ? என வினவிக் கொண்டு அம்பு கோத்த வில்லுடன் எம்முன் வந்து தோன்றினன். அங்ங்ணம் வின வினவனுடைய கல்லென உயர்ந்த தோள்களையும், கணை தொடுத்த வில்லேந்திய கைகளையும், ஆரம் பூசின அகன்ற மார்பினையும், கழுநீர் மாலை திகழும் கழுத்தினையும் கண்டு நாணி ஒருவர் முதுகில் ஒருவராக மறைந்து நின்றோம். ஒருவரும் பேசவில்லை. அவனோ, கூவினோம். மையீர் ஓதி மடவீர்! நும்வாய்ப் பொய்யும் உளவோ?’ - என்று வியந்து கேட்டனன். அன்னவன் நின்மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச் சென்றான். நின்மகளோ பகற் பொழுது மறையும் அந்தி நேரத்தில் அவன் சென்று மறையும் திசையை நோக்கி, "மகனே தோழி என்றனள் 167. அகம்-48 168. வேங்கை மாத்துப் பூக்கொய்வார் புலி புலி, என்று கூவின், அதன்கிளை தாழ்ந்து கொடுக்கும் என்பது இலக்கிய வழக்காகும். - - .