பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகன் 171 தலைவன்பால் உயர்குடிப்பிறப்பும் உருவும் திருவும் ஆற்றலும் பிறவும் உடைமை குறிப்பித்தபடியாகும். இத்தகைய பெருந் தகையாளன்பால் கண்ணோட்டமின்மை இழுக்கு என்பதைச் சுட்டி, இவ்வாறு ஒழுகுதல் தகாதெனக் கழறியதாகவும் கொள்ளலாம். ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவழித் தணந்துழி ஆம்மா ளாகிய தலைமகளை மற்றொரு தோழி ஆற்றுவிக்கின்றாள் அஃதாவது, தலைவன் களவொழுக்கம் நிகழ்த்தியபொழுது ஊரின்கண் ஆங்காய்கு அம்பல் தோன்றியது. அதனை அறிந்தவன் அஃது அலராகாது அடங்குதற்பொருட்டு ஒரு சில நாள் தன் மனையிலேயே தங்கி விடுகின்றான். அப்பிரிவினை ஆற்றாது தலைவி பெரிதும் வருந்துகின்றாள். இந் நிலையில் தோழி தலைவியை ஆற்றுவிக்கிள்றாள். கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது காண்கம் வம்மோ தோழி செறிவளை நெகிழ்த்தோன் எறிகட நாடே." (கானல் அம்பெருந்துறை-கடற்கரைச் சோலையிடத்த தாகிய அழகிய பெருந்துறை: கலி-ஆரவாரிக்கும்; திரைஅலைகள்; வான் உயர்-வானின்கட் செல்வது போன்று உயர்ந்தி: ஆனாது-இடைவிடாது. வம்மோ-வருவாயாக: நெகிழ்த்தோன்-கழலச் செய்தவன்.) * தலைவனுடைய பொருளைக் காணின் தலைவனைக் கண்டாற் போன்று ஆறுதலுண்டாகுமாதலின் அவன் நாட்டைக் காண் பேரம், என்று தோழி தலைவியை அழைக்கின்றான். இக்சி°சி பற்றி வெவ்வேறு போக்கில் எழுந்த பல பாடல்கள்’’’ ஐங்குறு நூற்றினை அழகு செய்கின்றன. வள்ளுவர் படைத்த தலைமகன் ஒருவன் சிலகாலம் ஒருவழித் தணந்து திரும்புகின்றான். தோழி அவனை நோக்கி நீவிர் தணந்த ஞான்று எம்மை நினைத்திரோ என்று வினவுகின்றாள். அதற்கு அவன், 184. இடி.199. . - 185. டிெ 214, 232, 233 என்பனவற்றையும் படித்து மகிழ்க,