பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 அகத்திணைப் கொள்கைகள்

 இதில் தலைவி தலைவனோடு சென்று விட்ட நிகழ்ச்சியைத் தோழி நற்றாய்க்கு அறிவித்தாளாக அது கேட்ட அவள் 'நம் மகள் கற்புக்கடம் பூண்ட செய்தியை எமக்கு அறத்தொடு நிலைவகையால் அறிவித்திருந்தால், யாமே, வரைவு எதிர் கொண்டு ஈண்டு நம் இல்லத்திலேயே வதுவை நிகழ்விப்போமே. அதனால் அவளுக் கும் இன்பம்; அவள்பால் அன்புடைய ஆயமகளிராகிய நுமக்கும் பேரின்பம் ஆகும். இப்பொழுதோ அவனோடு புணர்ந்து செல்லுங் கால் வரும் ஓரின்பமேயன்றி ஆற்றிடையூற்றால் அவளுக்கும் துன்பம், அந்நம்பிக்கும் துன்பம், நமக்கும் எல்லையில்லாப் பெருந் துன்பம் ஆயிற்றே. இத்தகைய செயலை எற்றிற்கு மேற்கொள்ள வேண்டும்?' என்று தோழியிடம் நொந்து கொள்வதைக் கான லாம். முன்னரே அறத்தொடு நின்றிருந்தால் உடன் போக்கினை மேற்கோள்ள வேண்டியதில்லையே எனப் பரிந்துரைப்பதையும் பார்க்கலாம்.

 உடன் போக்கு நிகழ்வதை அகப்பொருள் நூல்கள் குறிப் பதை ஈண்டுக் காட்டுவாம். இற்செறிப்பு முதலியவற்றால் தலைவிக்கு ஆற்றாமை மிக்குத் துயரம் பெருகிய நிலையில் தோழி, 'இனி இவள் (தலைவி) இறந்து படவும் கூடும்’ என்று உணர்ந்து கவன்று, வேறு வழியொன்றும் தோன்றாத நிலையில், இவ்வாறு செய்வாள்: பண்டு தலைவன் வந்து பயின்ற இடத் திற்குச் சென்று, தலைவனை எதிர்ப்பட்டு அவனைத் தொழுது வலஞ்செய்து, 'நும்மால் தலைவி மாட்டுச் செய்யப் பெற்ற தலையளி (பேரன்பு) உண்மையாகவே பலரான் அறியப் பெற்ற துடன், சுற்றத்தாரது சீற்றத்திற்கும் ஏதுவாயிற்று. நீவிர் முன்னரே தலைவியை மணந்து கொள்ள முயலாது, களவொழுக் கத்தே கருத்துக்கொண்டு ஒழுகியதா லன்றோ இந்நிலை ஏற்பட்டது? அல்லதூஉம் ஏதிலரும் வரைந்தெய்துவதற்கு முலை விலையொடு (பரிசமொடு) புகுந்து பொன்னணிய முந்துற்றார். இனி என் செய்வோம்?' என்று படைத்து மொழிவாள். இந்நிலை யில் தலைவன் தன்னாற் செய்யற்பாலது யாது என்று வினவுவான். அதற்குத் தோழி, 'நீரே சூழ்ந்து சொல்லுதிர்’ என்று மறுமொழி தருவாள். இதைக் கேட்ட தலைமகன் 'அவளை உடன்கொண்டு போவது துணிந்தேனெனினும், நிழலும் நீரும் இல்லாத அழல் கு வங்கானம் ஆற்ற கில்லாள் கொல்லோ?'என்று தன் ஐயப் பாட்டைப் புலப்படுத்துவான். அதற்குத் தோழி, அன்ன வெங் கான மெனினும், எம்பெருமாட்டிக்கு நும்மொடு வரப் பெரிதும்