பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் w 187 அஞ்சி இல்லத்தை விட்டுக் காட்டு நெறி சென்றாள்' என்று உடன் போய ஒரு தலைவியின் செவிலித்தாய் தன் மகளின் அச்சத்தைக் குறித்துக் கவலை கொள்ளக் காண்கின்றோம். அக நானுற்றில் ஒரு நிகழ்ச்சி சித்திரிக்கப் பெறுகின்றது. அயலார் மணம் பேச வந்த காலத்துத் தலைவியும் தோழியும் அதனை விலக்கத் தவறி விடுகின்றனர். பின்னர் அறத்தொடு நின்றுக் களவை வெளிப்படுத்தவும் பின்வாங்குகின்றனர். இந் நிலையில் மாற்றான் ஒருவனுக்கு மகளை மணவினைப் படுத்தப் பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். விடு விழாக் கோலம் காண் கின்றது; முற்றத்தில் புது மணல் பரப்பப் பெறுகின்றது நிலை கைகடந்து சென்று விட்டதை அறிந்த தோழி தலைமகனுக்கும் நிலைமையை அறிவிக்கின்றாள். ஊரைவிட்டு உடன் அகல்தலே மேற்கொள்ள வேண்டிய நெறி என்று அவன் கூறிய துணிச்சலான கருத்திற்கு தோழியும் உடன்படுகின்றாள். நனைவிளை நறவின் தேறல் மாந்திப் புனைவினை நல்லில் தருமணற் குவை இப் பொம்மல் ஓதி எம்மகள் மணனென வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் புதுவது புனைந்த செயலை வெள்வேல் மதியுடம் பட்ட மையணற் காளை அருஞ்சுரம் சேறல் அலர்ந்தனென் யானே." (நனை-அரும்பு, நறவு-தேன் (கள்); மாந்து-பருகி; குவைஇ. குவித்துப் பரப்பி; பொம்மல்-பொலிவு: வதுவைதிருமணம்; மதிஉடம்பட்ட-உடன் போக்கிற்கு இயைந்த: சுரம்-பாலைநிலம், சேறல்-செல்லுதல்; அயர்ந்தனன் விரும்பினேன்.) - என்ற அகப்பாட்டில் தோழி தலைமகட்கும் உடன் போக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதைக் காணலாம். களவொழுக் கத்திற்கு அஞ்சாத தலைவியும் தோழியும் நொதுமலர் வரைவுக் காலத்துப் பெற்றோர்க்கு நடுங்குவர் என்பதையும், இந்நடுக்கமே உடன்போக்கில் கொண்டு செல்லுகின்றது என்பதையும் இதனால் அறிகின்றோம். . 1- في بقي 215 216 டிெ-221.